News April 19, 2024

வழக்குகளில் வெற்றி தரும் சாட்சிநாதர்

image

தமிழகத்தில் நடைபெற்ற போர்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது திருப்புறம்பியம் போர். அந்தப் போரில் வென்ற முதலாம் ஆதித்தச்சோழன் கட்டிய திருத்தலமே சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயிலாகும். செவ்வாய்க் கிழமையில் இங்கு வந்து ஈசன் & குஹாம்பிகையை வணங்கி அர்ச்சனை செய்து, நெய்வடை சமர்ப்பித்து வழிபட்டால் சொத்து சம்பந்தமான பிரச்னை & வழக்குகளில் உடனடியாகத் தீர்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

News April 19, 2024

தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி

image

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 12ஆவது சுற்றில், தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றிப் பெற்றுள்ளார். அஜர்பைஜான் வீரர் நிஜாத் அபாசோவுக்கு எதிரான இப்போட்டியில், குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். வித்தியாசமான தொடக்கத்தை கொடுத்த குகேஷ், தனது உத்திகளை சரியான முறையில் செயல்படுத்தி 57ஆவது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

News April 19, 2024

IPL: வெற்றியைத் தொடருமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

image

சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையேயான 34ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள லக்னோ அணி, சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். பலம் வாய்ந்த CSK அணியுடன் மோதவுள்ளதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

News April 19, 2024

பூத் ஸ்லிப் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்க

image

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் ஸ்லிப் இதுவரை கிடைக்காதவர்கள், தேர்தல் ஆணையத்தின் <>https://electoralsearch.eci.gov.in/<<>> தளத்திலோ (அ) (VOTER HELP LINE) செயலியையோ பதிவிறக்கம் செய்து உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, வாக்குச்சாவடி விவரம், வரிசை எண், பாக எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

News April 19, 2024

சற்று நேரத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு

image

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவாக இந்திய நாடாளுமன்றத் தேர்தல் கருதப்படுகிறது.
தமிழகம் & புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அதற்குள் வரிசையில் வந்து நிற்கும் கடைசி நபர் வாக்களிக்கும் வரை வாய்ப்பளிக்கப்படும் என்றும் அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News April 19, 2024

ஜோசப் ஸ்டாலினின் பொன்மொழிகள்

image

✍அரசியல் அதிகாரம் வாக்களிப்பவர்களிடம் தங்கியில்லை; அரசியல் அதிகாரம் வாக்குகளை எண்ணுபவர்களிடம் தங்கியுள்ளது. ✍வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல; வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது. ✍பட்டுக் கையுறைகளுடன் உங்களால் புரட்சி செய்ய முடியாது. ✍நான் யாரையும் நம்புவதில்லை; என்னையே கூட நம்புவதில்லை. ✍இந்த உலகில் வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதைத் தான் வரலாறு காட்டுகிறது.

News April 19, 2024

காஸா தொடர்பாக கவலை தெரிவித்த பாலஸ்தீன அதிபர்

image

சர்வதேச நாடுகள் அனுப்பி வரும் உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை காஸாவுக்குள் அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதிக்குள் உதவிகளை அனுப்புவது பெரும் சவாலாக உள்ளதாக பாலஸ்தீன அதிபர் முகமது முஸ்தபா கவலை தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க
வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News April 19, 2024

பாகிஸ்தானுடன் விளையாட ஆர்வமாக உள்ளேன்

image

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட தான் ஆர்வமாக உள்ளதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து மைக்கேல் வானுக்கு அளித்த பேட்டியில், இருநாடுகளுக்கும் பொதுவான இடத்தில் விளையாடுவதில் எவ்வித பிரச்னையும் இல்லை. நான் முழுவதும் கிரிக்கெட்டை பற்றியே பேசுகிறேன். வேறு விஷயங்களை புகுத்த வேண்டாம். இங்கு பேட், பந்துக்கு மட்டுமே பங்கு உண்டு எனக் கூறினார்.

News April 19, 2024

இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாதவர்கள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால், அவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல வாகனம் அனுப்பி வைக்கப்படுமாம்.

News April 19, 2024

வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில்…

image

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்கும் கடைசி நபர் வாக்களிக்கும் வரை வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஜனநாயக கடமையை நிறைவேற்ற விரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

error: Content is protected !!