India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) இந்தியாவில் முதல் தேர்தல் 1951 அக். முதல் 1952 பிப். வரை நடந்தது 2) கேரளாவில் பொதுத் தேர்தலின்போது முதன்முதலாக 1982இல் EVM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன 3) நோட்டா சின்னத்தை அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் உருவாக்கியது 4) 1989இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் மூலம் வாக்களிக்கும் வயதானது 21இல் இருந்து 18ஆகக் குறைப்பு 5) 2014 மக்களவைத் தேர்தலில் நோட்டா அறிமுகம்

சேலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக 2 முதியோர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். எனவே, இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க கடுமையான வெயில் இருக்கும் பிற்பகல் நேரத்தில் முதியோர்கள் வாக்களிக்க செல்வதை தவிர்க்கவும். வெயில் தாழ்ந்த பிறகு 4 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி செல்லும் அனைவருக்கும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பஞ்சாப் வீரர் அசுதோஷ் ஷர்மாவை, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். போட்டி முடிந்த பின் பேசிய அவர், “அசுதோஷ் சர்மா விளையாடிய விதம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவர் அடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரிக்கு சென்றது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இறுதியில் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றியை தேடித் தந்ததில் மகிழ்ச்சி” எனக் கூறினார்.

தேர்தலில் விலங்குகள் வென்ற வினோதச் சம்பவங்கள் வரலாற்றில் நடந்துள்ளன. பிரேசிலில் 1922இல் பில்லி கோட் என்ற ஆடு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றது. வாஷிங்டனில் 1938இல் கோவேறு கழுதை வென்றது. டெக்சாசில் மேயர் தேர்தலில் நாயும், பூனையும் வேட்பாளர்களாக போட்டியிட்டதில் பூனை வென்றது. கலிபோர்னியாவின் சுனோல் மேயராக லேப்ரடார் நாய் 1981-1994 காலத்தில் வென்றது. இதுபோல பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுரை 22.35%, சேலம் 28.57%, ராணிப்பேட்டை 26.38%, வேலூர் 23.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் கெங்கவல்லி அருகே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்னபொண்ணு (77) மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வாக்களிக்க சென்ற முதியவர் பழனிசாமி (65) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஜவுளி ஏற்றுமதி தொடர்ந்து 2வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் 41.1 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் 2022- 23இல் 35.5 பில்லியன் டாலராக சரிந்தது. இந்நிலையில் 2023-24 நிதியாண்டில் 34.4 பில்லியன் டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. பிராந்திய பிரச்சினைகளால் சர்வதேசப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணமென கூறப்படுகிறது.

இந்தியாவில் முதல் தேர்தல் 1951 அக். முதல் 1952 பிப். வரை நடந்தது. ஹிமாச்சலின் ஷினி, பங்கி பகுதிகளில் 1951 அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து கேரள பகுதியான திருவல்லா, திருச்சூரில் 1951 டிசம்பரிலும், அதே மாதத்தில் கொச்சின், ஒடிசா, மத்திய பிரதேசம், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும், 1952 பிப்ரவரியில் உத்தர பிரதேச மலைபகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் நடந்தது

தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சென்னையிலுள்ள 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை – 8.59%, வடசென்னை – 9.73%, தென்சென்னை – 10.08% மற்றும் பல தொகுதிகளில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகள் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வந்து, ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்.

கோவையில் ₹1,000 கோடிக்கும் மேல் திமுக, அதிமுக வாரி இறைத்திருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கோவை தொகுதியில் திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்திருப்பதாகவும், ஆனால் பாஜக யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும் கூறினார். பாஜக பணம் அளித்ததை நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயாரென்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.