India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும் பெட்டிகள், அந்தந்த தொகுதிகளில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இனி ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றுதான் சீல் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.

‘படையப்பா’ படத்தில் “ஓஹோ ஓஹோ கிக்கு ஏறுதே…” என்ற பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இந்தப் பாடலில் “கம்பங்களி திண்ணவனும் மண்ணுக்குள்ள, தங்க பஸ்பம் திண்ணவனும் மண்ணுக்குள்ள..” என்ற வரி வரும். இதை நோட் செய்த ரஜினி, எம்ஜிஆர்தான் தங்க பஸ்பம் சாப்பிட்டதாக சொல்வார்கள். அதனால், இந்த வரி வேண்டாம் என சொல்லியிருக்கிறார். ஆனால், சர்ச்சை வராது எனக் கூறி ரஜினியை வைரமுத்து சமாதானம் செய்துள்ளார்.

தேர்தலை புறக்கணிப்பது தேவையில்லாத செயல் எனக் கூறியுள்ள அதிமுக MP தம்பிதுரை, மக்கள் நோட்டா சின்னத்திலாவது வாக்களிக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்களித்த பின் பேசிய அவர், காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தாலும், பாஜகவுடன் கள்ள உறவில் திமுக இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், வெயில் காரணமாக வாக்குப் பதிவு சற்று மந்தமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

வாக்களிக்கும் நேரம் 6 மணியுடன் நிறைவடைந்திருப்பதால் வரிசையில் கத்திருப்போருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள், வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர். இனி, 6 மணிக்கு மேல் டோக்கன் வைத்திருப்போருக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தமிழகத்தில் நிறைவு பெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். சில பகுதிகளில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலும், பெரும்பாலன இடங்களில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நீங்கள் வாக்கு செலுத்தினீர்களா?

மணிப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தை தீவைத்து எரித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூரில் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. இதில் தலைநகர் இம்பாலுக்கு அருகே உள்ள மொய்ராங் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடிய நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரத்தை தீவைத்து எரித்துள்ளனர்.

இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தி தன்னுடைய 5 வயது பேரன் ரோஹனுக்கு 15 லட்சம் இன்ஃபோசிஸ் பங்குகளை பரிசாக அளித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் தற்போதைய மதிப்பு ₹213 கோடி. இந்நிலையில் நேற்று ₹28 ரூபாயை ஈவுத்தொகையாக (dividend) அறிவித்தது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதில் மட்டும் ரோஹனுக்கு ₹4 கோடியே 20 லட்சம் கிடைக்கப் போகிறது.

5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 63.20 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 67.52% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.04% வாக்குப்பதிவு நடந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 72.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விளவங்கோடு இடைத் தேர்தலில் 56.60 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாமக வேட்பாளர் கே.பாலு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் கள்ள ஓட்டுக்கள் பதியப்படுவதாக அவர் புகார் எழுப்பியிருந்தார். அதனைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கை கேட்டு அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரியலூர் மாவட்டம் நரசிங்கபுரத்தில் பாஜகவினர் விசிகவினர் இடையேயான மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. வாக்குபதிவு அறைக்குள் இருந்த விசிகவினரை பாஜகவினர் வெளியேற சொன்னதால் மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த 3 பேர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை மார்கெட் பகுதியில் அதிமுக-திமுக இடையே மோதல் ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.