News April 19, 2024

புதிய உச்சத்தில் நெட்ஃபிளிக்ஸ்

image

பாஸ்வேர்ட் பகிர்வு வசதியைத் தடை செய்த பிறகு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 93.3 இலட்சம் கூடுதல் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் மார்ச் மாத முடிவில் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 26.96 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்பு, சுமார் 10 கோடி பேர் சந்தா செலுத்தாமல் இலவசமாக அச்சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அமேசான் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 23 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

News April 19, 2024

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (ஏப்ரல் 20) மாலை 4:30க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3:50க்கு எழும்பூரை வந்தடையும். அதேபோல், நாளை (ஏப்.20) அதிகாலை 5:30க்கு திருச்சியில் இருந்து கிளம்பும் ரயில் பிற்பகல் 1:20க்கு எழும்பூரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 19, 2024

இந்த ராசிகளுக்கு குபேர யோகம்

image

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் கஜலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் இருக்கும். ஆனால், மேஷம், மகரம், கும்பம் ஆகிய 3 ராசியினர் இந்த யோகத்தின் பலன்களை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். குபேரனே நேரில் வந்து உதவுவது போல இந்த 3 ராசியினருக்கு பண பாக்கியம் கிடைக்கவுள்ளது. தொழிலில் விருத்தி, பதவி உயர்வு, சம்பள உயர்வு, வியாபாரத்தில் லாபம் ஆகியவை எளிதாக கிடைக்கும்.

News April 19, 2024

அணுமின் நிலையங்களில் சேதம் இல்லை

image

இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானின் அணுசக்தி தளங்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமையை மிக உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ மோதல்களில் அணுமின் நிலையங்கள் ஒருபோதும் இலக்காக இருக்கக்கூடாது என இரு நாடுகளுக்கும் ஐநா வலியுறுத்தியுள்ளது.

News April 19, 2024

அதிரடியாக அரை சதம் அடித்தார் கே.எல்.ராகுல்

image

சென்னை அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் 31 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது அதிரடியால் LSG 10.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்துள்ளது. மற்றொரு வீரர் டி காக் 41* ரன்களுடன் ஆடி வருகிறார். இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 19, 2024

திருமண வெற்றியின் ரகசியம் சொன்ன வித்யா பாலன்

image

திருமண வாழ்க்கையின் சிக்கல்களை ஆராயும் ‘தோ அவுர் தோ பியார்’ என்ற படத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது திருமண வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் குறித்து பகிர்ந்து கொண்டார். திருமணம் என்பது கணவன், மனைவி என்ற இரண்டு நபர்களுக்கு இடையே இருக்க வேண்டும். அதில், குடும்பம் வரக் கூடாது. மேலும், திருமணத்தில் தனியுரிமையும் முக்கியம் எனத் தெரிவித்தார்.

News April 19, 2024

கடைசி ஓவரில் மாஸ் காட்டும் தோனி

image

லக்னோ அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் 4 பந்துகளை எதிர்கொண்ட தோனி 16 ரன்கள் விளாசினார். இதுவரை கடைசி ஓவரில் மட்டுமே 313 பந்துகளை எதிர்கொண்ட அவர், 772 ரன்கள் குவித்துள்ளார். இதில் 53 பவுண்டரிகள், 65 சிக்ஸர்களுடன் 246.64 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். தோனியின் அதிரடி பேட்டிங்கை பார்ப்பதற்காகவே சிஎஸ்கே ரசிகர்கள் கடைசி ஓவர் வரை காத்திருக்கின்றனர்.

News April 19, 2024

விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வாபஸ்

image

வாக்கு செலுத்தாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பில் இருந்து ஒரு நாள் கழிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று காலை அறிவித்திருந்தது. அதாவது, இன்றைய தினம் வேலை நாளாக கணக்கில் கொள்ளப்பட்டு, அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்ததாக கணக்கிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பினை தற்போது அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதற்கான காரணம் ஏதும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

News April 19, 2024

வாக்களித்த அனைவருக்கும் நன்றி

image

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதல்கட்ட தேர்தலே சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இன்றைய வாக்குப்பதிவின் மூலம் இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்தது தெளிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News April 19, 2024

ஆபத்தில் உலகப் பொருளாதாரம்

image

பருவநிலை மாற்றத்தால் உலகப் பொருளாதாரம் 2050ஆம் ஆண்டுக்குள் 19% வீழ்ச்சியடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவின் வருவாயைப் பொறுத்தமட்டில், 22% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உலக சராசரியை விட 3% அதிகமாகும். அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் வருவாய் 11% சரியும் எனக் கூறப்படுகிறது. உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு 38 டிரில்லியன் டாலர்களை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!