News April 20, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 20, 2024

உக்ரைன் அதிபரை கொலை செய்ய ரஷ்யா சதி செய்ததா?

image

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கொலை செய்ய சதிசெய்த பாவெல் கே என்ற நபரை போலந்து பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ரஷ்யாவின் ராணுவ உளவுத்துறைக்காக போலந்தில் இருந்தபடி, தகவல்களை சேகரித்து ரகசியமாக அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், இது குறித்து ஒற்றறிந்த போலந்து உளவுத்துறை, ரஷ்ஸோ-ஜசியோன்கா விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்ததாகத் தெரியவந்துள்ளது.

News April 20, 2024

‘கபீர் சிங்’ படத்தில் நடித்ததற்காக வருந்துகிறேன்

image

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘கபீர் சிங்’ படத்தில் நடித்ததற்காக தான் மிகவும் வருத்தப்படுவதாக நடிகர் அடில் ஹுசைன் வெளிப்படையாகப் கூறிருக்கிறார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், கபீர் சிங் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் பார்க்காமல் தான் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். அதுதான் நான் செய்த தவறு. அப்படத்தில் இருக்கும் வன்முறை & ஆணாதிக்கக் காட்சிகளில் தனக்கு உடன்பாடில்லை எனக் கூறினார்.

News April 20, 2024

காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள்!

image

மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். முர்ஷிதாபாத்தில் பிரசாரம் செய்த அவர், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் I.N.D.I.A கூட்டணி உருவாக நான் அதிக பங்களிப்பு செய்தேன். ஆனால், இங்கே சிபிஎம்மும், காங்கிரஸும் பாஜகவின் வெற்றிக்காக வேலை செய்கின்றன எனக் கூறினார்.

News April 20, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*I.N.D.I.A. கூட்டணியின் சிந்தனை தேச விரோத உள்ளது – மோடி
*ராணுவ மோதல்களில் அணுமின் நிலையங்கள் ஒருபோதும் இலக்காக இருக்கக்கூடாது – ஐ.நா
*பாஸ்வேர்ட் பகிர்வைத் தடை செய்த பின் 93.3 லட்சம் கூடுதல் சந்தாதாரர்கள் நெட்ஃபிளிக்ஸில் இணைந்துள்ளனர்.
*பிலிப்பைன்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா அளித்துள்ளது.
*CSK அணிக்கு எதிரான ஆட்டத்தில் LSG அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது

News April 20, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 20, 2024

விப்ரோவின் நிகர லாபம் 8% சரிவு

image

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டிற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தரவுகளின்படி, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 8% சரிந்து ரூ.2,835 கோடியாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் நிகர லாபம் ரூ.3,074 கோடியாக இருந்தது. வருவாயைப் பொறுத்தமட்டில், ரூ.23,190 கோடியிலிருந்து ரூ.22,208 கோடியாக குறைந்துள்ளது. இதனிடையே, பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையாக ரூ.1 அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

ரீல்ஸ் எடுத்தபோது இளைஞர் பரிதாபமாக பலி

image

சமீப காலமாக இளைஞர்களிடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், கொடிக்கம்பத்தில் தலைகீழாக தொங்கி ரீல்ஸ் எடுத்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. சிவம்குமார் (21) என்ற இளைஞர் பள்ளியில் இருந்த கொடிக்கம்பத்தில் ஏறியுள்ளார். அதில் தலைகீழாக தொங்கி கொடி ஏற்ற முயன்றபோது பாரம் தாங்காமல் கொடிக்கம்பம் கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

News April 19, 2024

BREAKING: லக்னோ த்ரில் வெற்றி

image

CSK அணிக்கு எதிரான ஆட்டத்தில் LSG அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 34ஆவது போட்டியில், டாஸ் வென்ற LSG பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து முதலில் பேட்டிங் செய்த CSK அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து 177 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய LSG அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

News April 19, 2024

கருப்பு அங்கியில் இருந்து விடுதலை

image

கொல்கத்தாவில் கோடை வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. கோடை வெயில் மென்மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், கோடை முடியும் வரையில் கருப்பு அங்கியிலிருந்து விடுதலை வேண்டி நீதிமன்றத்தை நாடியிருந்தனர். வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள நீதிபதிகள், ஜூன் 9 வரை வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய விலக்கு அளித்துள்ளனர்.

error: Content is protected !!