India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஹைதராபாத் – டெல்லி அணிகள் மோதிக்கொள்ளும் (35ஆவது) ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஹைதராபாத் அணி, புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு அணிகளை வீழ்த்திய ஹைதராபாத் அணியை, டெல்லி அணி தங்கள் சொந்த மைதானத்தில் வீழ்த்துமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இன்று வெற்றி பெறப் போவது யார்?

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் வளர்ச்சி என்பது வெறும் காதில் மட்டும் தான் கேட்கிறது என்று நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் அதிகாரம் மிக வலிமையானது என்று சொல்லி இருக்கிறார். அது என்ன வேண்டுமென்றாலும் செய்யும். அதனை நல்லவர்கள் கைப்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக 3ஆவது கட்சியாக அல்ல 30ஆவது கட்சியாக கூட இருக்காது எனக் கூறினார்.

சாதி ஏற்றத்தாழ்வுகளை, சமூக நீதி அரசியலை கமர்ஷியல் மசாலா கலந்த ‘மாமன்னன்’ போன்ற படங்கள் மூலம் மக்களை ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். 1999இல் நடந்த உண்மைச் சம்பவத்தை ‘வாழை’ என்கிற பெயரில் அவர் எழுதி, இயக்கியுள்ளார். ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவரே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். வாழ்வில் தான் கண்ட மனிதர்களின் வலியை இப்படத்தில் அவர் காட்சிப்படுத்தி உள்ளாராம்.

✍உண்மையைத் தேடி கண்டறிவது அறிவியல்; வெறுமனே தனக்குத் தெரியும் என்று நம்புவது அறியாமை. ✍அளவுக்கு மிஞ்சிய அனைத்தும் இயற்கைக்கு எதிரானது. ✍மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார்; ஆனால், இயற்கையே குணப்படுத்துகிறது. ✍பயன்படுத்தப்படுவது வளர்ச்சியடைகிறது; பயன்படுத்தப்படாதது வீணாகிறது. ✍புரிந்துகொள்ள முடியாத அனைத்தையும் தெய்வீகம் என்று அழைத்தால், தெய்வீக விடயங்களுக்கு முடிவே இருக்காது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பெற்ற ராகுல் காந்தி தானும் பணம் பறிப்பில் ஈடுபட்டதாக ஒத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களின் விகிதத்தையும், அவர்கள் பெற்ற நன்கொடையையும் பார்க்கும்போது, எங்களை விட அவர்கள் தான் அதிகமாக பெற்றுள்ளார்கள். காங்கிரஸ் கட்சி மட்டும் ரூ.1,334 கோடியும் நன்கொடை பெற்றது எனக் கூறினார்.

மாலத்தீவு முன்னாள் அதிபரும் சீன ஆதரவாளருமான அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரசுக்குச் சொந்தமான ஒரு தீவை குத்தகைக்கு விட்டு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், 2022இல் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இறுதி ஆட்டக்காரராக களத்திற்கு வந்து, மூன்று பவுண்டரிகள் அடித்து அற்புதமாக ஃபினிஷிங் செய்த தோனிக்கு தலைவணங்குவதாக LSG அணியின் வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், CSK-க்கு எதிரான இந்த வெற்றியை முக்கியமானதாகக் கருதுகிறோம். இன்னும் சில நாள்களில் சேப்பாக்கத்தில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளோம். அதற்கு முன் LSG வெற்றிப் பாதைக்கு திரும்பியதில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

▶ஏப்ரல் – 20 | ▶ சித்திரை – 07
▶கிழமை: சனி | ▶திதி: துவாதசி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 09:30 – 10:30 வரை
▶ராகு காலம்: காலை 09:00 – 10:30 வரை
▶எமகண்டம்: பிற்பகல் 01:30 – 03:00 வரை
▶குளிகை: காலை 06:00 – 07:30 வரை
▶சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

ஒவ்வொரு வாக்காளர்களும், வாக்குச்சாவடியில் உள்ள ஆவணத்தில் கையெழுத்து போட்டு தான் வாக்களிக்க செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால், பல வாக்குச் சாவடிகளில் அப்படி செய்யாமல், அலுவலர்கள் ஆவண நோட்டீனை தங்கள் பக்கம் வைத்தே தலைகீழாக கையெழுத்து வாங்கினர். ஒவ்வொருவரிடமும் நோட்டினை அவர்கள் பக்கம் காண்பித்து கையெழுத்து வாங்குவதற்கு தாமதமாவதாகக் கூறி, சோம்பல்பட்டு இது போல செய்துள்ளனர்.

இந்திய அளவில் எந்தவொரு கூட்டணியிலும் இணையப் போவதில்லை என்று மிசோரம் முதல்வரும் மக்கள் முன்னணி தலைவருமான லால்டுகோமா அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் எங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறோம். டெல்லியில் இருந்து யாரும் எங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், எப்போதும் போல சுதந்திரமாக செயல்படவே விரும்புகிறோம் எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.