India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘ரோமியோ’ படம் குறித்து நெகட்டிவாக விமர்சனம் தருபவர்களுக்கு நடிகர் விஜய் ஆண்டனி பதிலடி கொடுத்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், பல நல்ல படங்களைத் தவறாக விமர்சித்துக் கொல்லும் ‘ப்ளூ சட்டை மாறன்’ போன்ற சிலருக்கும், அவர்கள் சொல்வதை நம்பி நல்ல படத்தை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை விமர்சிக்கும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ரோமியோவை அன்பே சிவம் ஆக்கீடாதிங்க எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை திருமயத்தில் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் (55) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று முழுவதும் கடும் வெயிலில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட அவர், தேர்தல் முடிந்து பேருந்தில் ஏற முயன்றபோது மாரடைப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். வாக்குச் செலுத்த வந்தோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோர் என மொத்தம் 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

ரோஹித் ஷர்மாவை வாங்குவது தொடர்பான வதந்திகளுக்கு, நடிகை ப்ரீத்தி ஜிந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். MI-க்கு எதிரான போட்டிக்கு பிறகு, ரோஹித்தை PBKS அணி வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விளக்கமளித்த அவர், இது முற்றிலும் தவறான ஒரு செய்தி. எங்கள் அணியின் கேப்டன் ஷிகர் தவன் காயத்தில் இருக்கும் இந்த சூழலில், இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி போட்டியிட்ட தூத்துக்குடியில் 7 மணிக்கு 70.95% வாக்குப்பதிவு எனக் கூறப்பட்ட நிலையில் 12 மணிக்கு 59.96%ஆகவும், டி.ஆர்.பாலு போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூரில் 69.79%லிருந்து 60.21%ஆகவும், அண்ணாமலை போட்டியிட்ட கோவையில் 71.17%லிருந்து 64.81ஆகவும், தமிழிசை போட்டியிட்ட தென்சென்னை தொகுதியில் 67.82ஆக இருந்த வாக்கு சதவிதம் 54.27%ஆகவும் குறைந்துள்ளது.

அன்புமணி மனைவி சௌம்யா போட்டியிட்ட தருமபுரியில் நேற்றிரவு 7 மணிக்கு 75.44% வாக்குப்பதிவு என கூறப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு 81.48%ஆக அதிகரித்துள்ளது. ஜோதிமணி போட்டியிட்ட கரூரில் 7 மணிக்கு 74.05%ஆக இருந்த வாக்கு சதவீதம்12 மணிக்கு 78.61%ஆகவும், சேலத்தில் 73.55%ஆக இருந்த வாக்கு சதவீதம் 78.13%ஆகவும், நாமக்கலில் 74.29%ஆக இருந்த வாக்கு சதவீதம் 78.16%ஆக உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.55,080க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,885க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒருகிராம் வெள்ளி ரூ.90க்கும், கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனையாகிறது.

சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பிசிசிஐ அபாரதம் விதித்துள்ளது. பந்துவீச்சின் போது, இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காமல் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டன. இதனால் ஸ்லோ ஓவர் ரேட் (Slow Over Rate) விதியை மீறியதாக, இரு அணிகளுக்கும் தலா ரூ.12 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ அதிரடியாக உத்தரவிட்டது. இரு அணிகளுக்கும் இது முதல் அபராதம் ஆகும்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வாக்காளர்கள் தாங்கள் வாக்கு செலுத்தியதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வாக்குச்சாவடியில் செல்போன் கொண்டுச் செல்ல அனுமதி இல்லாதபோது வீடியோ எடுத்தது எப்படி? என பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. நேற்று பல்வேறு வாக்குச்சாவடிகளில் செல்போன் எடுத்துச் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் பார்வை ஒருவர் மீது பட்டால் கடும் துயரம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். அத்தகைய சனி பகவானையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் பெருமாள். ஆதலால் சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்தால், சனி பகவானின் தாக்கம் குறையும். சனிக்கிழமை அன்று முழு விரதம் இருந்து அவரை மனமுருக வேண்டினால், வறுமை ஒழிந்து செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

கடந்த 28 ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்களிக்காத முதல் தேர்தலாக நேற்று நடந்த மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது. 1996ல் கரூர் யூனியன் கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தை அவர் தொடங்கினார். அப்போது முதல் 2021 வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும், செந்தில் பாலாஜி அவரது சொந்த ஊரான, ராமேஸ்வரபட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் காலையிலேயே முதல் ஆளாக குடும்பத்துடன் சென்று வாக்களிப்பது வழக்கம் ஆகும்.
Sorry, no posts matched your criteria.