News April 20, 2024

வாக்குப்பதிவு சதவீதம்: மாறுபாடு (1)

image

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் நேற்றிரவு 7 மணி, இரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் மாறுபட்டுள்ளது. அதைப் பார்க்கலாம். இரவு 7மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் வடசென்னையில் 69.26%, இரவு 12 மணி அறிவிப்பில் 60.13% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் காஞ்சிபுரத்தில் 72.99%, இரவு 12 மணி அறிவிப்பில் 71.55% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

வாக்குப்பதிவு சதவீதம்-மாறுபாடு (3)

image

இரவு 7 மணி அறிவிப்பில் அரக்கோணத்தில் 73.92%, இரவு 12 மணி அறிவிப்பில் 74.08% வாக்குப்பதிவாகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் வேலூரில் 73.04%, இரவு 12 மணி அறிவிப்பில் 73.42% வாக்குப்பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரவு 7 மணி அறிவிப்பில் திருவண்ணாமலையில் 73.55%, இரவு 12 மணி அறிவிப்பில் 73.88% வாக்குப்பதிவாகி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 20, 2024

வாக்குப்பதிவு சதவீதம்- மாறுபாடு (2)

image

இரவு 7 மணி அறிவிப்பில் மத்திய சென்னையில் 67.35%, இரவு 12 மணி அறிவிப்பில் 53.91% வாக்குப்பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் திருவள்ளூரில் 71.87%, இரவு 12 மணி அறிவிப்பில் 68.31% வாக்குப்பதிவாகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் ஸ்ரீபெரும்புதூரில் 69.79%, இரவு 12 மணி அறிவிப்பில் 60.21% வாக்குப்பதிவாகி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 20, 2024

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ரத்து

image

இந்தியா வரும் தனது பயணத்தை திடீரென ஒத்திவைப்பதாக, ட்விட்டர் (X) உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா கார் தயாரிப்பு ஆலையை அமைப்பதற்கு இடங்களை ஆய்வு செய்வதற்காகவும், பிரதமர் மோடியை சந்திப்பதற்காகவும் நாளை மறுநாள் (ஏப்ரல் 22) எலான் மஸ்க் இந்தியா வரவிருந்தார். இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால், இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News April 20, 2024

BREAKING: நடிகர் விஜய் மீது புகார்

image

நடிகர் விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார். அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று விஜய் வாக்களித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2024

சென்னையில் 4% வாக்குப்பதிவு குறைவு

image

சென்னையில் 2019 மக்களவைத் தேர்தலை விட, தற்போது 4% வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது. 2019ல் தென் சென்னையில் 57.07% வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 60.13% வாக்கு பதிவாகி உள்ளது. மத்திய சென்னையில் 2019ல் 58.98% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 54.27% வாக்குகள் பதிவாகி உள்ளது. வட சென்னையில் 2019ல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 60.13% வாக்குகளே பதிவாகி உள்ளன.

News April 20, 2024

வாக்குப்பதிவு சதவீதம்: மாறுபாடு (1)

image

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் நேற்றிரவு 7 மணி, இரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் மாறுபட்டுள்ளது. அதைப் பார்க்கலாம். இரவு 7மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் வடசென்னையில் 69.26%, இரவு 12 மணி அறிவிப்பில் 60.13% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி அறிவிப்பில் காஞ்சிபுரத்தில் 72.99%, இரவு 12 மணி அறிவிப்பில் 71.55% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும்

image

சனாதனம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி கூறிய கருத்து மிகவும் தவறானது, அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரின் இக்கருத்து காங். – திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. டெங்கு, மலேரியாவை ஒழிப்பது போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கடந்த ஆண்டு உதயநிதி பேசியிருந்தார்.

News April 20, 2024

BREAKING: மேலும் ஒருநாள் டாஸ்மாக் இயங்காது

image

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் சுமூகமாக நடைபெற வேண்டும் என ஏப்.17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்று (காலை 12 முதல் இரவு 10 வரை) வழக்கம்போல் இயங்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநேரம், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இரவு 10 மணி முதல் 22ஆம் தேதி காலை 12 மணி வரை மீண்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

இஸ்ரேல் தாக்குதலின் பின்னணி

image

ஈரானுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்பஹான் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னணி தெரிய வந்துள்ளது. இஸ்பஹான் பகுதியில்தான் ஈரானின் அணுஆயுத ஆய்வுக் கூடங்களும், ஆயுதக் கிடங்குகளும் உள்ளன. இஸ்ரேல் வரைச் சென்று தாக்கும் ஷஹாப் ஏவுகணைகள், அங்குதான் அசெம்பிள் செய்யப்படுகின்றன. ரஷ்யாவிடம் இருந்து பெற்ற எஸ்.300 சிஸ்டமும் அங்கேயே உள்ளது. அதனாலேயே இஸ்ரேல் அங்கு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!