India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கருப்பு மணல் ஊழலில் கேரள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து செயல்படுவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். பல்வேறு ஊழல் விவகாரங்களில் பினராயி விஜயனின் குடும்ப உறுப்பினர்களுக்கும், அவரின் அலுவலகத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இது குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற அவர், வெளிப்படை தன்மைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனது முதல்வரை பற்றிப் பேசத் தயங்குகிறா்கள் என்றார்.

வாக்காளர்களை அச்சுறுத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மானுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்தியப் படைகள் ஏப்ரல் 26-ஆம் தேதி வரைதான் இருக்கும், அதன் பிறகு மாநிலப் படைகள் தான் எப்போதும் இருக்கும் எனத் தேர்தல் பரப்புரையில் அவர் கூறியிருந்தார். இந்த பேச்சு தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இளையராஜா இசையமைத்த 4,500 பாடல்கள் மீதான சிறப்பு உரிமையை எதிர்த்து, எக்கோ நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பாடல்கள் ஏதேனும் விற்கப்பட்டிருந்தால் அது இந்த மேல்முறையீட்டுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்து வழக்கை ஜூன் 2ஆவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், தமிழக எல்லையில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லையில் உள்ள கோழி, வாத்துப் பண்ணைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கேரளாவில் இருந்து வரும் கோழிகளுக்கு முற்றிலும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பணிநியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மே.வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த 2016இல் 26 ஆயிரம் ஆசிரியர் பணியமர்த்தப்பட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, அந்த நியமனங்களை அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பு தேர்தல் நேரத்தில் மம்தா அரசுக்கு சிக்கலாகக் கருதப்படும் நிலையில், தற்போது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் ஏப்ரல் 26ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரளா தேர்தலையொட்டி, குமரி, தேனி, கோவை எல்லை மாவட்டங்களிலும், கர்நாடகா தேர்தலையொட்டி ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய எல்லை மாவட்டங்களிலும் டாஸ்மாக் இயங்காது எனக் கூறப்படுகிறது.

‘ஆவேஷம்’ திரைப்படம், உலக அளவில் ₹100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த ஏப்.11ஆம் தேதி திரைக்கு வந்தது. ரங்கா கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் ஃபாசில், சக நடிகர்களுடன் இணைந்து கேங்ஸ்டர் காமெடியனாக வெளுத்து வாங்கி இருக்கிறார். இதனால் மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம், பிரம்மயுகம் போன்ற வெற்றிப் படங்கள் வரிசையில் ஆவேஷமும் இணைந்துள்ளது.

ED கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்துள்ளார். பண மோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை ED ஜனவரி 31இல் கைது செய்தது. இந்நிலையில் இந்த கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் பிப்ரவரி 26இல் வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத் தயாரிப்பாளர்கள் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். பரவா பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி, படத்தின் லாபத்தில் 40% தருவதாகக் கூறி தன்னிடம் ₹7 கோடி வாங்கி ஏமாற்றியதாக அரூரைச் சேர்ந்த சிராஜ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி, படத் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் இந்தியாவிலேயே 3ஆவது இடத்தை (42.3 டிகிரி செல்சியஸ்) சேலம் பிடித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் அனந்தபூர் முதலிடமும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 2ஆவது இடமும் பிடித்துள்ளன. சேலத்தில் இன்றும் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்கவும். நேற்று கரூர் 3வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.