India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 5,365 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நேற்று புதிய உச்சமாக 40.50 MU சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும், இது மார்ச் 13இல் பதிவான 39.90 MU என்ற முந்தைய சாதனையை முறியடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். எனினும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. மறுபுறம், சில தனியார் பள்ளிகள் ஆர்டிஇ குறித்த சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிப்பதில்லை என பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதனால், 2022 – 23 கல்வியாண்டில் 95,946 ஆக இருந்த ஆர்டிஇ மாணவர்கள் சேர்க்கை, கடந்த ஆண்டு 70,553 ஆக குறைந்துள்ளது.

EVM, விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100% ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய வழக்கில், நீதிபதிகளின் சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளித்தது. தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கப்பெற்றதாக கூறி நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

கேரளாவில் அண்ணாமலையை வரவேற்று வைத்த பேனர்களை போலீஸார் அகற்றியதற்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் கடந்த சில நாள்களாக அண்ணாமலை பரப்புரை செய்து வருகிறார். வயநாடு பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரனை ஆதரித்து இன்று அவர் பரப்புரை செய்த நிலையில், அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அனுமதி இல்லாததால் அந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.

மேற்கு திரிபுராவில் உள்ள 4 பகுதிகளில் ஏறத்தாழ 100%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக சிபிஎம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து பேசிய திரிபுரா சிபிஎம் செயலாளர் ஜிதேந்திர சௌத்ரி, மஜ்லிஷ்பூரில் (44வது பகுதி) 105%, மோகன்பூரில் (38வது பகுதி) 109% என கூடுதல் சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கிறது. முறைகேடு செய்தால் மட்டுமே இதுபோன்ற பொருந்தாத வாக்குச் சதவீதம் நிகழும் என்றார்.

மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோழிக் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலையால் காற்று, நீர் மாசுபடுவதாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதிகளுக்கு உட்பட்டே ஆலை செயல்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தும் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம், ஏப்.28 அல்லது 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ரோஹித் ஷர்மா, அஜித் அகர்கர், டிராவிட் தலைமையிலான ஆலோசனைக் குழு, 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுக்க உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், முன்னணி வீரர்கள் தங்களுக்கான உத்தேசப் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய வழக்கில், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவி என மூன்றுக்கும் தனித்தனி மைக்ரோ கன்ட்ரோலர்கள் உள்ளன. தேர்தல் முடிந்தபிறகு அந்த மூன்று கருவிகளுக்கும் சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீட்டை அதிகரிக்க INDIA கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் சமூக நீதி மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த அவர், சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் இடஒதுக்கீட்டிற்கான அச்சுறுத்தலை திராவிட இயக்கம் எதிர்த்து வந்ததாகக் கூறினார். மேலும், இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து, ரேஷன் கடைகளில் அரிசி வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வாங்கியதாக கணக்கெழுதி அரிசியை கடத்துகின்றனர். இதை அரசு உடனே தடுக்க வேண்டும். கடத்தல் தொடர்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் புகார் தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.