India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
சூர்யாவை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
‘ரெட்ரோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படம், வரும் மே ஒன்றாம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை காமிக்ஸ் வடிவில் படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி, 6வது வாரமாக படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி உள்ளது. காமிக்ஸ் சுவாரஸ்யமாக உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்பு எகிறியுள்ளது.
வெள்ளத்தால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டபோது, சிலரை மட்டும் விஜய் சென்னை வரவழைத்து உதவி செய்தார். அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். மும்மொழி காெள்கை உள்ளிட்ட விவகாரங்களில் மீண்டும் அறிக்கை வெளியிட்டார். நேரடியாக களத்தில் இறங்கவோ, ஆர்ப்பாட்டமோ செய்யவில்லை. இதை கண்ட தவெக தொண்டர்கள், விஜய் என்ன அரசியல் செய்கிறார், சுத்தமாக புரியல என்கின்றனர்.
கச்சா எண்ணெய் என்றதும் சவுதி அரேபியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளே நமது நினைவுக்கு வரும். ஆனால் உலகில் முதன்முதலில் எண்ணெய் வளம் அந்நாடுகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. அஜர்பைஜானின் பாகு நகர் அருகே 1846இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எண்ணெய் கிணறு தோண்டப்பட்டு எண்ணெய் உற்பத்தி தொடங்கியது. 1899 வரை உலகிற்கு தேவையான பாதி கச்சா எண்ணெய்யை அந்நாடே உற்பத்தி செய்தது.
ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சென்னை, ஹைதராபாத், பாங்காக் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.
UK-ல் கொரோனா காலத்தில் நம்பிக்கை துரோகம் செய்த பெண்ணை பற்றிய கதை இது. லாரா மெக்பெர்சன் என்பவர், தனக்கு புற்றுநோய் இருப்பதாக பொய்க் கூறி தனது ஆண் நண்பரிடம் ரூ.28 லட்சம் வாங்கினார். அதில், லாரா தனது மார்பகத்தை விரிவாக்கம் செய்துள்ளார். இதனையறிந்த அந்த நபர் வழக்கு தொடர்ந்தார். லாரா குற்றவாளி என உறுதியானது. வஞ்சகமான பொய்யர் என லாராவை திட்டிய ஜட்ஜ், ஊரடங்கு கண்காணிப்பு பணி செய்ய ஆணையிட்டிருக்கிறார்.
சிலர் எப்போதுமே சோர்வாகவும், தூங்கி வழிந்து கொண்டும் இருப்பார்கள். சிறிய வேலை செய்தாலும், டயர்ட் ஆகிவிடுவார்கள். போதிய வைட்டமின்கள், இரும்புச் சத்து இல்லாததே இதற்கு காரணம் என டாக்டர்கள் கூறுகின்றனர். கீரை, பச்சை காய்கறிகள், இறைச்சி போன்ற சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது, அதிக தண்ணீர் குடிப்பது, புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை கடைப்பிடித்து வந்தாலே இந்த சோர்வு பறந்துவிடும்.
விஜயின் துள்ளலான நடனம், சிவகார்த்திகேயனின் வரிகள், அனிருத்தின் இசையென அரபிக் குத்து பாடலுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. பீஸ்ட் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானாலும்,
‘அரபிக் குத்து’ பாடல் இன்றும் ரசிகர்களுக்கு சலிக்கவில்லை. யூடியூபில் மட்டும் இந்த பாடலின் வீடியோ 70 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
மும்பையில் மன்னட் என்ற அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அரண்மனை புதுப்பிக்கப்பட இருப்பதால் அங்கிருந்து தற்காலிகமாக வெளியேறும் அவரது குடும்பம், பாலி ஹில்லில் பட தயாரிப்பாளர் வாசு பாக்னானிக்கு சொந்தமான 2 அபார்ட்மெண்ட்களில் குடிபெயர உள்ளது. இதற்கான மாத வாடகை மட்டும் ரூ.24 லட்சமாம். ‘மன்னட்’ புனரமைப்பு சுமார் 3 ஆண்டுகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
காயம் காரணமாக KKR வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் குஜராத்தை சேர்ந்த சேத்தன் சக்காரியாவை கொல்கத்தா அணியில் இணைந்துள்ளது. 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அவர் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் KKR மற்றும் RCB அணிகள் ஈடன் கார்டன்ஸில் மோதுகின்றன.
Sorry, no posts matched your criteria.