India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் பரபரப்பால் இம்மாதம் வெளியாக இருந்த பல படங்கள் தள்ளிப்போனது. இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி 2898 ஏடி’, சுந்தர்.சி.யின் ‘அரண்மனை 4’, பார்த்திபனின் ‘டீன்ஸ்’, சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’, கவினின் ‘ஸ்டார்’, சாய் தன்ஷிகாவின் ‘தி ஃபுரூப்’ ஆகிய படங்கள் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிஷ்கினின் ‘பிசாசு 2’, அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படங்களும் வெளியாக வாய்ப்புள்ளது.

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் அந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக் கோரிய மனு தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எழுத்தாளரும், பேச்சாளருமான ஷிவ் கேரா இது தொடர்பாக பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். தற்போது நிலவரப்படி, ஒரு தொகுதியில் 99.99% சதவீத வாக்குகளை நோட்டா பெற்று, ஒரே ஒரு வாக்கினை வேட்பாளர் ஒருவர் பெற்றாலும் அவரே வெற்றி பெற்றவராகிறார்.

மங்கோலியாவுக்கு எதிரான மகளிர் T20 போட்டியில், 1 ரன் கூட கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தோனேசிய வீராங்கனை புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய இந்தோனேசிய வீராங்கனை ரோமாலியா, 4 ஓவர்களில் 3 மெய்டன் & 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் மங்கோலியா அணி 24 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சர்வதேச T20 கிரிக்கெட்டில், இதுவரை எந்தவொரு (ஆண்/பெண்) பவுலரும் இந்த சாதனையை படைத்ததில்லை.

‘காதல் தி கோர்’ படத்தில் மம்மூட்டியின் நடிப்பைப் பார்த்து வியந்த நடிகை வித்யா பாலன், பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். தன்பால் ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் நடித்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாகத் தெரிவித்த அவர், துல்கர் சல்மானுக்கு மெசேஜ் செய்து தந்தையிடம் தனது பாராட்டைத் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று கேரளா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்றது. இதில், கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 69.04% வாக்குப்பதிவு நடந்ததாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2.77 கோடியாகும்.

பள்ளிக் மாணவர்களை எந்த விதத்திலும் தண்டிக்கக் கூடாது என அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்த விதிகளைக் கட்டாயம் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மாணவர்களை அடிப்பது போன்ற தண்டனைகளைத் தடுக்க வேண்டும் என ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது.

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பட்டியலின மாணவிகள் இருவரை தலைமை ஆசிரியர் கழிவறையை சுத்தம் செய்ய நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் பேசும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜேஎன்யூ மாணவிகள் ஹிஜாப் அணியத் தடையில்லை எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிதர் தெரிவித்துள்ளார். உடை அணிவது மாணவர்களின் தனிப்பட்ட உரிமை என்ற அவர், உணவு, உடை, ஆடை விவகாரத்தில் மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது.

சூரத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வேண்டுமென்றே வேட்புமனுவை தவறாக நிரப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கட்சி அவரை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நீலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்நிலையில் கும்பானி பாஜகவுடன் இணைந்து சதி செய்திருக்கலாம் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி விசாரணையை தொடங்கியுள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள KKR அணி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது. இதேபோல, 8 போட்டிகளில் விளையாடிய PBKS அணி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
Sorry, no posts matched your criteria.