News April 27, 2024

மோடி ஆட்சி, NDA கூட்டணி ஆட்சியாக மாறிவிட்டது

image

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், NDA கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது எதிர்கட்சிகளை ஏமாற்றமடைய செய்யும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதலில் மோடியின் ஆட்சி எனக் கூறியவர்கள், பின் பாஜகவின் ஆட்சி என்றார்கள், தற்போது NDA கூட்டணி ஆட்சி எனக் கூறுவதாக விமர்சித்துள்ளார்.

News April 27, 2024

அழகிப் பட்டம் வென்ற 60 வயது பெண்

image

அர்ஜெண்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில், 60 வயது பெண் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லா பிளாட்டா நகரை சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரொட்ரிக்ஸ், 60 வயதிலும் அச்சு அசலாக இளம்பெண் தோற்றத்துடன் அழகாக காணப்படுகிறார். இதனால், அவர் பியூனஸ் அயர்ஸ் மாகாண அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவே, சிறந்த அழகியாக தேர்வாகி க்ரீடம் சூட்டப்பட்டார்.

News April 27, 2024

தேர்தலுக்காக எங்களைப் பயன்படுத்த வேண்டாம்

image

தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காக பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய அரசியல்வாதிகளுக்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் குறித்து தவறான கருத்துகளைத் தெரிவிப்பது பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜஸ்தானில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 27, 2024

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை

image

அடுத்த 5 நாள்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் 2 டிகிரி வரை வெப்ப நிலை உயரக்கூடும் என எச்சரித்துள்ள வானிலை மையம், மே 2ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்; ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News April 27, 2024

மோடியின் குற்றச்சாட்டுக்கு சித்தராமையா பதிலடி

image

ஓபிசி இடஒதுக்கீடு குறித்து மோடி பொய் பேசுவதாக சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் அரசு அளித்து விட்டதாக மோடி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த சித்தராமையா, அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி, சமூக ரீதியில் பின்தங்கிய அனைவருக்கும் இடஒதுக்கீடு என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது, மதம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றார்.

News April 27, 2024

ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொன்றில் சுண்ணாம்பு

image

வடகிழக்கு பருவமழையின்போது தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசிடம் ₹38,000 கோடியை தமிழக அரசு நிவாரணமாக கேட்டது. நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது. இந்நிலையில் தமிழகத்துக்கு ₹276 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. அதேவேளை கர்நாடகத்துக்கு வறட்சிக்காக ₹3,454 கோடி ஒதுக்கியுள்ளது. இதைக்கண்ட சமூக ஆர்வலர்கள், ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொன்றில் சுண்ணாம்பா என கேட்கின்றனர்.

News April 27, 2024

கோலியின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது

image

ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து விராட் கோலியின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலியை தேர்வு செய்யக்கூடாதென சில முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்த், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் சர்வதேச தரத்திற்கு நிகரான திறமைகளை பார்க்க வேண்டும் எனக் கூறினார்.

News April 27, 2024

“கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது”

image

கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது; பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதியளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் வேட்பாளர்கள் பெயர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை புகார் கூறி இருந்த நிலையில், கோவையை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்த இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

News April 27, 2024

குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்

image

குடிநீர் பிரச்னை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ₹150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

News April 27, 2024

தமிழகத்தில் போட்டியின்றி தேர்வான மூன்று பேர்!

image

மக்களவைத் தேர்தலில் மூவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வரலாறு தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. அதன் விவரம் இதோ:- 1952 – ராமலிங்க செட்டியார் (கோவை) 1957 – கணபதி நாடார் (திருச்செந்தூர்) 1962 – கிருஷ்ணமாச்சாரி (திருச்செந்தூர்). இவர்கள் 3 பேரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் கிருஷ்ணமாச்சாரிக்கு அப்போதைய பிரதமர் நேரு, மத்திய அமைச்சர் பதவி வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!