News April 28, 2024

பணியிடங்கள் அதிகரிப்பு, வேலைத் தேடுபவர்கள் குறைவு

image

மத்திய அரசின் NCS இணையதளம் வாயிலாக வேலைத் தேடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, 1.09 கோடி பணியிடங்களுக்கு 87 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 2022 – 23 நிதியாண்டில் 34 லட்சமாக இருந்த வேலை வாய்ப்பு, 214% உயர்ந்து கடந்த நிதியாண்டில் 1.09 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் வேலைத் தேடுபவர்களின் எண்ணிக்கை 53% மட்டுமே உயர்ந்துள்ளது.

News April 28, 2024

அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தோல்வி

image

மத்திய பிரதேசத்தில் பர்வானி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 75 பேரில், 5 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை, அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

News April 28, 2024

100 பெண்களுடன் வீடியோ. EX பிரதமரின் பேரனுக்கு சிக்கல்

image

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக ஹாசன் தொகுதியில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு அவர் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி கர்நாடகா அரசியலை புரட்டிப் போட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்

News April 28, 2024

ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் சவால்

image

தைரியம் இருந்தால் வாரணாசியில் போட்டியிடுங்கள் என ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சவால் விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி வயநாட்டிலும், அமேதியிலும் நிச்சயம் தோற்பார் என்றார். தன்னை எதிர்த்து ராகுல் வடக்கு மும்பையிலும் போட்டியிடலாம் எனக் கூறிய அவர், 4 – 5 இடங்களில் நின்றால் தற்செயலாக ஒன்றில் வெற்றி பெறலாம் எனக் கிண்டல் செய்தார்.

News April 28, 2024

இஷான் கிஷனுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ

image

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காகப் போட்டி சம்பளத்தில் 10%-ஐ அபராதமாகச் செலுத்துமாறு MI அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில், அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை அடுத்து, நடத்தை விதி பிரிவு 2.2இன் கீழ், லெவல் 1 குற்றத்திற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கான அபராதத்தைக் கட்ட அவர், ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

ரம்யா, ரஷ்மிகா மீது ரசிகர்கள் கோபம்

image

கர்நாடகாவில் நேற்று முன்தினம் 14 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் வாக்களித்தனர். இதனிடையே, நடிகைகள் ரம்யா, ரஷ்மிகா மந்தானா ஆகியோரும் வாக்களிக்க வருவார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், அவர்கள் வாக்களிக்க வராத நிலையில், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவர்களை டேக் செய்து காரணத்தைக் கேட்டு வருகின்றனர்.

News April 28, 2024

டெல்லி காங். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்

image

டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவைத் தேர்தலில் அறிமுகம் இல்லாதவர்களை கட்சித் தலைமை களமிறக்கியுள்ளது என அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

News April 28, 2024

விமர்சிக்கும் முன் அறிக்கையை படித்துவிட்டு வாங்க மோடி!

image

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துவரும் பிரதமர் மோடி, அதனை ஒருமுறையாவது படிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காட்டமாகக் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பரம்பரை வரி என்ற சொற்றொடர் தேர்தல் அறிக்கையில் எங்குமே இல்லை. தேர்தல் அறிக்கையில் இல்லாத வார்த்தைகளை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு மோடி விமர்சித்து வருகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News April 28, 2024

தேர்தல் ஆணையத்தை விமர்சித்தவர் கைது!

image

தேர்தல் ஆணையத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கேரளாவின் கொச்சி மாவட்டம் கக்கனட் பகுதியை சேர்ந்த முகமது சஜி (51) தனது பேஸ்புக் பக்கத்தில், “தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, முகமது சஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஜி, நேற்றே சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

News April 28, 2024

முத்தக்காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை

image

முத்தக்காட்சிகளில் நடிக்க விரும்பாத காரணத்தால், என்னைத் தேடி வந்த பல திரைப்பட வாய்ப்புகளை மறுத்தேன் என்று நடிகை மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார். சினிமாவில் பல படங்களை தவறவிட்டது குறித்து பேசிய அவர், “நெருக்கமான காட்சிகளில் நடிக்க எனக்கு பயமாக இருக்கும். அப்படியான காட்சிகளில், நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதை எனது பெற்றோரும் ஏற்கமாட்டர்கள். இதனால் பல படங்களை மறுத்தேன்” எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!