News April 29, 2024

பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்

image

பிரஜ்வால் ரேவண்ணாவுக்காக வாக்குச் சேகரித்த பிரதமர் மோடி, மகள்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓவைசி தெரிவித்துள்ளார். பிரஜ்வால் பின்னணியை அறிந்திருந்தும் மோடி ஏன் அவருக்கு வாக்குச் சேகரித்தார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் இருப்பதைப் போன்ற ஆபாச வீடியோ வெளியான நிலையில், அவர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். வீடியோ தொடர்பாகக் கர்நாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது.

News April 29, 2024

தீண்டாமைக் கொடுமையை அனுபவித்தேன்: பா.ரஞ்சித்

image

பிறந்த ஊரிலேயே தீண்டாமைக் கொடுமையால் தள்ளி வைக்கப்பட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ஆவடி அருகே உள்ள கரளப்பாக்கத்தில் பிறந்த அவர், நான் ஒரு தலித் என்பதால் திரெளபதி அம்மன் கோயிலில் தன்னை அனுமதிக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், அந்தத் தீண்டாமைக் கொடுமை தனக்கு பிடிக்காததால் அதன்பிறகு அந்தக் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதே இல்லை எனவும் அவர் கூறினார்.

News April 29, 2024

பொடுகு, முடி உதிர்வை தவிர்க்க…

image

2 தேக்கரண்டி திரிபலா சூரணம், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், அரை தேக்கரண்டி வேப்ப எண்ணெய் இம்மூன்றையும் தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். பின்னர் தலையில் அனைத்து இடங்களிலும் படும்படி நன்றாக தேய்க்கவும். 30 நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு சீயக்காய் (அ) ஷாம்பூ போட்டு குளிக்கவும். வாரத்தில் 3 நாட்கள் இதை செய்து வர, அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு பிரச்சனைகள் தீரும்.

News April 29, 2024

3ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்

image

மக்களவைத் தேர்தலில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 94 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் மொத்தம் 1,352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 9 சதவீதம், அதாவது 123 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவர். இவர்களில் 18% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மேலும், 7 பேர் தாங்கள் தண்டனை பெற்றுள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

News April 29, 2024

APPLY NOW: நாளையே கடைசி நாள்

image

நவோதயா பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத 1353 காலிப் பணியிடங்களுக்கு, navodaya.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க நாளையே கடைசி. இதேபோல, இந்திய அணுசக்தி கழகத்தில் 400 காலிப் பணியிடங்களுக்கு B.Sc., B.E.,B.Tech., படித்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் பிரிவில் காலியாக உள்ள 827 பணியிடங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.

News April 29, 2024

ஏன் இதுவரை ஜாமின் கோரவில்லை?

image

ஜாமின் கோரி ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலிடம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுபான வழக்கில் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இதுவரை ஏன் ஜாமின் கேட்கவில்லை என கேள்வி எழுப்பியது. வழக்கே சட்டவிரோதம் என்பதால் ஜாமின் கோரவில்லை என கெஜ்ரிவால் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

News April 29, 2024

பிபிசிக்கு மீண்டும் சம்மன்

image

குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட விவகாரத்தில், பிபிசிக்கு டெல்லி கோர்ட் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்தாண்டு வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நிறுவனம் மீது குஜராத் என்.ஜி.ஓ வழக்கு தொடுத்தது. ஏற்கெனவே அனுப்பிய சம்மன் சென்றடையாத நிலையில், பிரிட்டனில் உள்ள பிபிசி முகவரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டில் நடைபெறுமென அறிவித்துள்ளது.

News April 29, 2024

OLA தலைமைச் செயல் அதிகாரி ராஜினாமா

image

OLA நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக, 3 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற ஹேமந்த் பக்‌ஷி, தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்தது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடகை கார் மற்றும் பைக் டாக்சி சேவையில் முன்னணியில் உள்ள OLA நிறுவனம், தனது ஊழியர்கள் 10% பேரைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.

News April 29, 2024

என்னைக் கைது செய்ய முயற்சிகள் நடக்கின்றன

image

‘என்னைக் கைது செய்ய முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் நான் பயப்பட மாட்டேன்’ எனத் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாகப் போலி வீடியோ வெளியான விவகாரத்தில் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனிடையே, அமித் ஷாவின் போலி வீடியோவை பரப்பியதாக அசாமைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2024

IPL : டெல்லி அணி பேட்டிங்

image

ஐபிஎல் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து டெல்லி அணி முதலில் களமிறங்குகிறது. புள்ளிப் பட்டியலில் KKR 2ஆவது இடத்திலும், DC அணி 6ஆவது இடத்திலும் உள்ளது. பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க டெல்லி அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றி பெறும் என கமெண்டில் கூறுங்கள்.

error: Content is protected !!