India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மா, இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நள்ளிரவு 12 மணிக்கு மனைவி மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அவருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அவர், லக்னோவுக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் அடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

▶கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, பொதுமக்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ▶சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். ▶மோர், தயிர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசலை போன்றவற்றை பருகலாம். ▶வெளியே செல்லும்போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும். ▶தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ▶நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 131
▶குறள்: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
▶பொருள்: ஒருவருக்கு உயர்வு உயர்வான மதிப்பை தரக்கூடியது ஒழுக்கம். எனவே, அந்த ஒழுக்கத்தை உயிரை விட மேலானதாகப் போற்றப்பட வேண்டும்.

ஜனநாயகத்தை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம் என காங்., எம்.பி. ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். சத்தீஸ்கரில் நடந்த பேரணியில் பேசிய அவர், ஒரு பக்கம் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்றும், மறுபுறம் காங்கிரஸ் அதை காப்பாற்ற முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்புச் சட்டம் தான் ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது என கூறியுள்ளார்.

DC-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், KKR வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து, ரிஷப் பண்ட், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், குமார் குஷாக்ரா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், டெல்லி அணி தாங்கள் எதிர்பார்த்த இலக்கை குவிக்க முடியாமல் திணறி வந்தது. இறுதியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

விஜய் சேதுபதி நடித்து வரும் ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள், தற்போது தென்காசியில் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததும், ஃபிளாஷ் காட்சிகளுக்கு தேவையான ‘டீ ஏஜிங்’ தொழில்நுட்பத்தை செய்வதற்காக வெற்றிமாறன் அமெரிக்கா செல்ல உள்ளார். அதன்பின், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக, UGC – NET தேர்வு வரும் ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு வரும் ஜூன் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில், கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான UGC – NET தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், NET தேர்வு மாற்றப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களை விற்பனை செய்வோரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று SDPI வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், கஞ்சா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதற்காக மாவட்ட அளவில் தனிப்படைகள் அமைத்து எங்கெல்லாம் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அதிரடி சோதனை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ அணியின் நட்சத்திர பவுலர் மயங்க் யாதவ், உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 156.7கி.மீ வேகத்தில் பந்துவீசும் அவர், நடப்பு ஐபிஎல் தொடரின் அதிவேகமாக பந்துவீசும் பவுலராக அறியப்படுகிறார். ஏப்.7ஆம் தேதி நடந்த GT-க்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அடுத்து நடந்த 5 போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது பூரணமாக குணமடைந்த அவர், MI-க்கு எதிரான நாளைய போட்டியில் பங்கேற்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.