News April 30, 2024

தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று சம்பளம் வராது?

image

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளம் மாத இறுதி நாளிலோ அல்லது அடுத்த மாத முதல் தேதியிலோ பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். இவர்களுக்கான சம்பளப் பட்டியலை கருவூலமே வங்கிக்கு அனுப்பும். இந்நிலையில், கருவூலம் மூலம் சம்பளம் வழங்க பயன்படுத்தப்படும் IFHRMS மென்பொருள் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பது சந்தேகம் எனத் தெரிகிறது.

News April 30, 2024

உடல் உறுதிக்கு 8 போடுங்கள்…

image

நடைப்பயிற்சியில் சிறந்தது 8 வடிவ நடைப்பயிற்சி என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகாலை 5 முதல் 6 மணி வரையும், மாலை 5 முதல் 6 மணி வரையும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்யச் சிறந்த நேரமாகும். இந்த பயிற்சியை 18 வயது நிரம்பிய எவரும் செய்யலாம். பயிற்சியின்போது, வயிறு காலியாக இருக்க வேண்டும். வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டின் பால்கனி, மொட்டை மாடி ஆகிய இடங்களில் இந்த பயிற்சியைச் செய்யலாம்.

News April 30, 2024

சின்னத்திரையில் களம் இறங்கும் வடிவேலு?

image

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக ‘டாப் குக்கு, டூப் குக்கு’ என்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியை சன் டிவி களம் இறக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்த நடிகர் வடிவேலுவை அதிக சம்பளம் கொடுத்து போட்டியாளராக அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக ஆதரவாளராக அறியப்படும் வடிவேலு, சன் டிவி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 30, 2024

திருமணத் தடை நீக்கும் திருப்பரங்குன்றம்

image

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருப்பது திருப்பரங்குன்றம். சூரபத்மனை முருகன் போரில் வென்ற பிறகு, இந்திரன் தன் மகள் தெய்வானையை அவருக்கு மணம் முடித்து வைக்கிறார். அதனால், இங்கு முருகனும், தெய்வானையும் மணக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். மேலும், மலை வடிவில் சிவபெருமான் அருள் புரிகிறார். இங்கு சென்று வழிபட்டால், தடைப்பட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும்.

News April 30, 2024

தாம்பரம் நாராயணன் திமுகவில் இருந்து விலகல்

image

செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், காஞ்சிபுரம் மாவட்ட திமுக அமைப்பாளருமான தாம்பரம் நாராயணன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 2021இல் அமமுகவில் இருந்து விலகிய இவர், அக்கட்சியின் முக்கிய தலைவர்களையும் அழைத்து வந்து திமுகவில் இணைந்தார். இந்நிலையில், கட்சியில் இணைந்து 3 ஆண்டுகளாகியும் தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி அவர் விலகியுள்ளார்.

News April 30, 2024

ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து காதலர் பதில்

image

நடிகை ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து, அவருடைய முன்னாள் காதலர் சாந்தனு மெளனம் கலைத்து பேசியிருக்கிறார். சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்று, சாந்தனுவிடம் ஸ்ருதியுடனான பிரிவு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “மன்னித்து விடுங்கள், இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்” என்று அந்த கேள்வியைத் தவிர்த்திருக்கிறார். இதனால் இருவருக்கும் பிரேக்கப் ஆனது உறுதியாகியுள்ளது.

News April 30, 2024

மணிப்பூரில் இன்று மறுவாக்குப்பதிவு

image

மணிப்பூரில் வன்முறை வெடித்த 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, சில வாக்குச்சாவடிகளில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தினர். அதனால், உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங், ஓயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

News April 30, 2024

பிரதமர் மோடி பொய்களை மட்டுமே பேசுகிறார்

image

பெண்களின் தாலியை காங்கிரஸ் பறித்துக் கொள்ளும் என்று பிரதமர் மோடி பொய் பேசுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பல்கலைக்கழகம், ESI மருத்துவமனை, ஜவுளி பூங்கா, ரயில்வே பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை என்றும், இதில் ஒன்றையாவது மோடி அரசு செய்திருக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 30, 2024

NET தேர்வு ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றம்

image

சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக, UGC – NET தேர்வு வரும் ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு, வரும் ஜூன் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில், கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான UGC – NET தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், NET தேர்வு மாற்றப்பட்டுள்ளது.

News April 30, 2024

மலிங்காவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்

image

DC-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், KKR வீரர் சுனில் நரைன் புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார். 1. சுனில் நரேன்- 69* (ஈடன் கார்டன்ஸ்), 2. லசித் மலிங்கா- 68 (வான்கடே), 3. அமித் மிஸ்ரா- 58 (பெரோசா).

error: Content is protected !!