India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆறாம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தைப் பள்ளிக்கல்வித்துறை நீக்க வேண்டுமென MNMK கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2 ஆண்டுகளாகப் பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் விமர்சனம் செய்தும், சர்ச்சைக்குரிய சீட்டுக்கட்டுகள் குறித்த பாடப்பகுதியை நீக்காமல் பாடநூல் கழகம் அலட்சியம் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியோருக்கு ரத்தம் உறைதல், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டன. இதில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியோருக்கு ரத்தம் உறைதல், பக்க விளைவுகள் ஏற்படக் கூடும் என அந்த நிறுவனம் கூறியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ’25 years of Pan india swag’ என்ற பெயரில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மனோஜ் இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் 4 கண்டெய்னர் லாரிகளில் ₹2,000 கோடி சிக்கியது குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவின்பேரில் கொச்சினில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு ₹500 கோடி, பெடரல் வங்கிக்கு ₹1,000 கோடி, எச்டிஎப்சி வங்கிக்கு ₹500 கோடி கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆவணங்களை சரிபார்த்ததில் உறுதியானதால் லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் ஆசம் தலைமையிலான அணியில், அப்ரார் அகமது, ஆசம் கான், ஹசன் அலி, இஃப்திகார் அகமது, முகமது அமீர், முகமது ரிஸ்வான், முகமது இர்ஃபான் கான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடர் மே 5ஆம் தேதியும், இங்கி., எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடர் மே 22ஆம் தேதியும் தொடங்க உள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஜஹாங்கீராபாத் பகுதியில் மோகித் என்ற இளைஞரைப் பாம்பு கடித்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது, கங்கை நதியில் உடலை வைத்தால் விஷம் தானாக இறங்கி விடும் என்று சிலர் கூற, இளைஞரின் உறவினர்கள் அவரின் உடலைக் கயிறு கட்டி 2 நாள்களாகக் கங்கை நதியில் போட்ட நிலையில், விஷம் தலைக்கேறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தியாவுக்குச் சொந்தமான தீவுகளை சாட்டிலைட் சர்வே மூலம் தான் கண்டறிந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஜூனாகத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லீம் லீக்கின் மொழியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எழுதப்பட்டுள்ளதாக விமர்சித்தார். மேலும், சட்டப்பிரிவு 370ஐ நீக்கினோம். ஆனால் அதனை மீண்டும் கொண்டு வருவோமென அரச குடும்பத்தினர் வெளிப்படையாகக் கூறி வருவதாகவும் சாடினார்.

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று என சசி தரூர் தெரிவித்துள்ளார். 400 இடங்களில் வெல்வோம் என்ற பாஜகவின் பேச்சு நகைச்சுவை என்று குறிப்பிட்ட அவர், கடந்த முறை பாஜக வென்ற 300 இடங்கள் மீண்டும் கிடைக்காது என்றார். 2 கட்டத் தேர்தலிலேயே பாஜகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சசி தரூர் போட்டியிட்ட திருவனந்தபுரம் தொகுதியில் ஏப்., 26இல் தேர்தல் நடைபெற்றது.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ரூ.19.6 லட்சம் கோடி பரிமாற்றம் செய்துள்ளனர். பணத்தைக் கையில் எடுத்துச் செல்ல விரும்பாதோர் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்கின்றனர். இதுபோல ஏப்ரலில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.65,933 கோடி மதிப்பிலான 44.3 கோடி பரிவர்த்தனைகள் செய்திருப்பதும் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆந்திராவில் ₹2,000 கோடி கைப்பற்றப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 13ஆம் தேதி அங்குத் தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கஜராம்பள்ளியில் 4 கண்டெய்னர் லாரிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள் அவற்றில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்தப் பணம் RBI-க்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.