India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

RR அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் SRH அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RR அணி, தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ரியான் பராக் (77), ஜெய்ஸ்வால் (67), ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது, புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்துவீசி அணியை வெற்றி பெற செய்தார்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (1 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் ஆடம்பர விழாவாகக் கருதப்படும் மெட் காலா 2024, மே 6ஆம் தேதி தொடங்குகிறது. ஃபேஷன் அடையாளமாகக் கருதப்படும் விஐபிக்கள் இதில் கெளரவிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு இந்தியாவின் ஆலியா பட், பிரியங்கா சோப்ரா பங்கேற்றனர். இதில் பார்வையாளர் டிக்கெட் ஒன்று 50,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.40 லட்சத்துக்கு விற்றுள்ளது. அதே போன்று முழு பார்வையாளர் டேபிளுக்கு ரூ.2 கோடி செலுத்த வேண்டும்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க உரிய நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு விசிக எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு இயக்ககத்துக்கு அனுப்பிய கடிதத்தில், ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க 2022ஆம் ஆண்டுக்குப் பின் நிதி வழங்கவில்லை. மேலும், 11,000 ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க நிதி இல்லாமல் பணிகள் முடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேஷம் – ஆரோக்கியம் மேம்படும்
ரிஷபம் – வாய்ப்புகள் கிடைக்கும்
மிதுனம் – முயற்சிக்கு ஏற்ற பலன்
கடகம் – கவனமாக இருக்க வேண்டும்
சிம்மம் – பணி சுமை ஏற்படும்
கன்னி – குடும்பத்தில் மகிழ்ச்சி
துலாம் – பண வரவு சிறப்பாக இருக்கும்
விருச்சிகம் – நினைத்த காரியம் கைகூடும்
தனுசு – சிறு தடைகள் உண்டாகும்
மகரம் – பணியிடத்தில் அனுசரித்து செல்லவும்
கும்பம் – கருத்து வேறுபாடு நிலவும்
மீனம் – பணத்தை கவனமாக கையாளவும்

புலம்பெயர்வோரைக் கண்டு இந்தியா அச்சத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புலம் பெயர்வோரை வரவேற்பதே அமெரிக்க பொருளாதாரம் வளர்வதற்குக் காரணம் என்றார். பொருளாதாரத்தில் சீனா ஸ்தம்பிக்கவும், ஜப்பான் பிரச்னையைச் சந்திப்பதற்கும், ரஷ்யா, இந்தியாவில் பிரச்னை நிலவவும், புலம்பெயர்வோர் மீதான ஒருவித அச்சமே காரணமென்றும் அவர் தெரிவித்தார்.

பாலியல் புகாரில் சிக்கிய எம்.பி பிரஜ்வாலின் வீடியோக்களை வெளியிட்டதாகக் கருதப்படும் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் திடீரென மாயமாகி உள்ளார். 13 ஆண்டுகள் பிரஜ்வாலிடம் டிரைவராகப் பணியாற்றிய அவருக்கும், பிரஜ்வாலுக்கும் நில விவகாரத்தில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக்குழு முன் ஆஜராக உத்தரவிட்ட நிலையில் கார்த்திக் மாயமாகி உள்ளார். இது கர்நாடக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம் ஏற்காடு உள்பட 12 மாவட்டங்களில் இயற்கை சூழலை பாதுகாக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது சென்னை உள்பட 17 மாவட்டங்களில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறுவதாகவும் விரைவில் தமிழகம் முழுவதும் திட்டம் அமலாகும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு ஆஸ்கர் விருதைப் பெற்று தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படம், ₹124 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. அப்படத்தில் அனில் கபூர் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஷாருக்கிடமும், பிறகு அமிதாப் மற்றும் கோவிந்தாவிடமும் படக்குழு பேச்சு நடத்தியுள்ளது. ஆனால் அவர்கள் 3 பேரும் மறுக்கவே, அனில் கபூர் நடித்தார். அந்தத் திரைப்படம் உலக அளவில் ₹3,145 கோடி வசூலைக் குவித்தது.

நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் பணவீக்கம் பலமடங்கு அதிகரித்து விட்டதாகவும், தேர்வுத்தாள்கள் அடிக்கடி கசிய விடப்படுவதாகவும், ஊழல்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். அரசு வேலைவாய்ப்புக்கு முடிவுகட்டும் திட்டங்களை பாஜக கொண்டு வந்திருப்பதாகவும் கூறினார்
Sorry, no posts matched your criteria.