News May 3, 2024

மாவட்ட கல்வி அலுவலர்களின் நியமனம் ரத்து

image

இடஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாகக் கூறி, அதிமுக ஆட்சியில் TNPSC மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து, 4 வாரங்களில் இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கனவு என்பது படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான். ஆனால், TNPSC பணி நியமனத்தில் கூட இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லை என்றால் என்ன செய்வது.

News May 3, 2024

பிரஜ்வாலை பிடிக்க ஜெர்மனி விரைகிறது சிறப்புப் படை

image

ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராகி புகார் அளிக்கலாம் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிரஜ்வால் ஜெர்மனி சென்றதாகத் தெரியவந்ததை அடுத்து, அவரை பிடிக்க சிறப்புக் குழுவை அந்நாட்டிற்கு அனுப்ப காவல்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

News May 3, 2024

தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலியில் போட்டி

image

தோல்வி பயத்தால் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை என மோடி விமர்சித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பிரசாரம் செய்த அவர், வயநாடு தொகுதியில் தோற்று விடுவார் என்பதால் ராகுல் ரேபரேலியில் போட்டியிடுவதாகவும், சோனியா காந்தியும் தேர்தலில் போட்டியிடாமல் ராஜஸ்தானில் இருந்து எம்பி ஆனதாகவும் தெரிவித்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களே தோல்வி பயத்தில் ஓடி ஒளிவதாகவும் தெரிவித்தார்.

News May 3, 2024

பொதுநல வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

image

தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் (எடுத்துகாட்டு: ஓபிஎஸ் பெயரில் 5 பேர் போட்டி) போட்டியிடுவதை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யாரோ ஒருவருக்கு ராகுல் காந்தி என பெயர் இருக்கிறது என்பதற்காக, அவரைத் தேர்தலில் போட்டியிடாமல் தடுத்துவிட முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.

News May 3, 2024

மே, ஜூன் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக

image

கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு பாஜக எம்.எல்.ஏ.வானதி புதிய யோசனை வழங்கியுள்ளார். வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க ஒரு ரூபாய்-க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்றும், மே, ஜூன் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமா என்பதை கமெண்ட் பண்ணுங்க.

News May 3, 2024

ஹேமந்த் சோரன் மனு தள்ளுபடி

image

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு இது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததால், உச்சநீதிமன்றத்தை மேல்முறையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 3, 2024

மகளின் திருமணத்தை எளிமையாக முடித்த ஜெயராம்

image

‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜெயராம். இவர் தனது மகளின் திருமணத்தை குருவாயூரில் எளிமையாக முடித்திருக்கிறார். இவரது மகள் மாளவிகாவும், பாலக்காட்டைச் சேர்ந்த நவ்னீத்தும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. கோயிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.

News May 3, 2024

பாலியல் புகாருக்கு மே.வங்க ஆளுநர் மறுப்பு

image

பணிப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை மே.வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் மறுத்துள்ளார். தன் மீது குற்றச்சாட்டு கூறி யாராவது ஆதாயம் அடைய விரும்பினால் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த பெண் ஒருவர் அவர் மீது புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மம்தா கட்சியினர் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்த உள்ளனர்.

News May 3, 2024

டார்ச் வெளிச்சப் பிரசவத்தினால் தாய், சேய் பலி

image

மும்பையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், தாயும் சேயும் உயிரிழந்தனர். மின்வெட்டு ஏற்பட்டு 3 மணி நேரமாகியும் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரண்டு உயிர்கள் பறிபோன நிலையிலும், அதனை பொருட்படுத்தாது மருத்துவர்கள் மற்றொரு பிரசவத்தை இருட்டில் மேற்கொண்டதாகக் கூறினர்.

News May 3, 2024

ஹேர் கலரிங்கில் மறைந்திருக்கும் ஆபத்து

image

சிலர் தங்களை ஸ்டைலாகவும், மாடர்னாகவும் காட்ட ஹேர் கலரிங் செய்ய விரும்புகின்றனர். ஆனால், இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதில் உள்ள அமோனியா போன்ற ரசாயனப் பொருட்கள், முடியில் வறட்சி, உதிர்தல், உடைதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். சிலருக்கு தலையில் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் புற்றுநோய் ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!