India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புல்வாமா தாக்குதல் நடந்த 10 நாள்களில் பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியில் பாஜக அரசு பதிலடி கொடுத்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சங்லியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்துவரும் தீவிரவாதிகள், தங்குத் தடையின்றி குண்டுவெடிப்புகளை நடத்தியபோது, அவர்களை யாரும் தடுக்கவில்லை. தீவிரவாதத்தை பாஜக அரசுதான் ஒழித்தது” எனக் கூறினார்.

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்வது தொடர்புடைய பல்வேறு இடங்களில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். ஆனால், அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியான நிலையில், அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க சிறப்பு புலனாய்வுக்குழு தயாராகி வருகிறது. இதன் மூலம் அவரைப் பிடிக்கச் சர்வதேச காவல் உதவியை சிறப்புப் புலனாய்வுக்குழு நாடவுள்ளது.

தொடர்ச்சியாக வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகளைப் பதிவிட்டதாக, நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் முடக்கப்பட்டது. பிறகு, கடந்த ஆண்டு அவரது கணக்கு பயன்பாட்டுக்கு வந்தது. தீவிர பாஜக ஆதரவாளராக இருந்த அவருக்கு, எம்பி சீட் வழங்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், அவர் மண்டி தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்திருப்பதால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால், பகல் நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். அப்படி, வெயிலில் வரும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் அளிக்கும் வகையில் கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் சிக்னல்களில் பசுமை பந்தல்களை அமைத்து வருகின்றன. இதற்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பசுமை பந்தல்கள் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாஜக ஆட்சியில் நக்சல் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஜார்கண்டின் பாலமு பகுதியில் பிரசாரம் செய்த அவர், சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் தீவிரவாதத்தைப் பரப்பி வந்ததாகக் கூறினார். இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தி காடுகளுக்கு சென்றதால், ஏராளமான தாய்மார்கள் பிள்ளைகளை இழந்து தவித்ததாகக் கூறிய மோடி, அவர்களின் வாக்கு பிள்ளைகளைக் காப்பாற்றியது எனத் தெரிவித்தார்.

அரசு நிறுவனத்திற்கு நிகரான சேவையை வழங்குகிறோம் என தனியார் செல்போன் நிறுவனங்கள் வெளிநாடுகளில் விளம்பரம் செய்கின்றன. ஆனால், நம் நாட்டிலோ பொதுத்துறை நிறுவனமான BSNL இன்றுவரை நெட்வொர்க்கை சீரமைக்க முடியாமல் தத்தளித்து வருகிறது. 5ஜி, 6ஜி சேவையை பிற நிறுவனங்கள் வழங்கத் தயாராகும் நிலையில், நிதி & ஆள்பற்றாகுறை காரணங்களால் 4ஜி சேவையைக் கூட முழுமையாக அளிக்க முடியாமல் திணறுகிறது. எப்போது இந்நிலை மாறும்?

நெல்லை கிழக்கு மாவட்டச் காங்., செயலாளர் ஜெயக்குமாரை 2 நாளாக காணவில்லை என அவரது மகன் புகார் தெரிவித்திருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக அவர் கடிதம் எழுதி இருந்த நிலையில், திசையன்விளை அருகே சொந்த ஊரில் உள்ள வீட்டின் தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், அவரது சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோடை வெயில் காரணமாக தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து, சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசை டிடிவி வலியுறுத்தியுள்ளார். தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரை குடம் ஒன்றுக்கு ₹15 – ₹20 வரை பணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வெங்காய ஏற்றுமதி மீதான தடையை 6 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், அதற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு ரூ.41,690ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஏற்காடு மலைப்பாதையில் மே 1இல் நடந்த பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து இபிஎஸ் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு தலா ₹10 லட்சம் வழங்குமாறும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ₹2 லட்சம் அளிக்கவும் வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.