News March 19, 2025

ஹலால், அவுரங்கசீப் கல்லறை.. பற்றி எரியும் மகாராஷ்ட்ரா

image

மகாராஷ்டிராவில் ஹலால் இறைச்சி, ஜத்கா இறைச்சி ஆகிய 2 முறைகளை வைத்து கடந்த சில மாதங்களாக விவாதம் நடக்கிறது. இந்நிலையில் அவுரங்கசீப்பின் கல்லறையை வைத்து மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அக்கல்லறையை அப்புறப்படுத்தக்கோரி இந்து அமைப்புகள் நாக்பூரில் நேற்று நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையால் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு பல பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

14,000 பேரை பணிநீக்கம் செய்கிறது அமேசான்

image

இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் 14,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செலவின குறைப்பு நடவடிக்கையாக கடந்த நவம்பரில் 18,000 பேரை அமேசான் பணிநீக்கம் செய்தது. இதன் தொடர்ச்சியாக கார்ப்பரேட் பதவிகளில் உள்ள 14,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆட் குறைப்பால் ஆண்டுதோறும் ரூ.31,000 கோடிக்கும் மேல் சேமிக்க முடியும் என அமேசான் கருதுகிறது.

News March 19, 2025

SMS மூலம் PF இருப்பு அறியும் வசதி

image

SMS மூலம் <<15795824>>தொழிலாளர் <<>>வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் உள்ள இருப்புத் தொகையை எளிதில் அறிய முடியும். இதற்கு PFஇல் நாம் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN என எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பியதும் ஆங்கிலத்தில் PF கணக்கில் தற்போது எவ்வளவு தொகை இருப்பில் உள்ளது என்பது விரிவாக எஸ்எம்எஸ் மூலம் பதில் அனுப்பப்படும். இந்தத் தகவலை பகிருங்கள்.

News March 19, 2025

நகைக் கடன் பெற RBI-யின் புதிய விதிமுறைகள் என்ன?

image

ஏழை எளிய மக்கள், விவசாயிகள் தங்கள் அவசரத் தேவைக்கு நகைக் கடனையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், நகைக்கடன் வைக்க <<15798931>>RBI<<>> விதித்துள்ள புதிய விதிமுறை, பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வங்கியில் அடகு வைத்த நகைகளை வட்டியுடன் முழுப்பணமும் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும். இதற்கு முன்பு, அடகு வைத்த நகைகளை ஆண்டு வட்டி மட்டும் கட்டி, அதே நாளில் அடகை நீட்டித்துக்கொள்ளலாம்.

News March 19, 2025

பாக். தீவிரவாதிகளை வேட்டையாடுகிறதா ‘ரா’?

image

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள், மர்ம நபர்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். அண்மையில் லஷ்கர் இ தொய்பா மூத்த தலைவர் அபு காதலும் அதுபோல சுட்டுக் கொல்லப்பட்டார். இதுபோல இந்தியாவால் தேடப்பட்ட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை செய்வது யார் என தெரியவில்லை. ஆனால் இந்தியாவின் ரா உள்ளிட்ட உளவு அமைப்பினரே அவர்களை கொன்றதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

News March 19, 2025

IPL-ல் இருந்து தோனி ஓய்வா? – சீக்கா கருத்து இதுதான்!

image

ஐபிஎல் ஃபீவர் தொடங்கிய பின் வெளியாகும் கிரிக்கெட் செய்திகளில் தோனி பெயரே அதிகம் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், தோனிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். ‘தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது அவருக்கே தெரியாது. இன்னும் சில ஆண்டுகள் கூட விளையாடுவார். தோனி நல்ல ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். இப்போதும் No.1 கேப்டன் தோனிதான்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 18, 2025

இதுதான் நாட்டுக்கு தேவை: ராகுல் காந்தி

image

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான் நாட்டுக்கு தற்போது தேவை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கும் அவர், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நடத்திக் காட்டுவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

News March 18, 2025

24 தலித்துகள் கொலை.. 3 பேருக்கு மரண தண்டனை

image

உ.பி.யில் 24 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. தெகுலியில் 1981இல் போலீஸ் உடையில் புகுந்த ராதே, சந்தோஷ் சிங் உள்ளிட்ட 17 பேர் கும்பல், தலித்துகளை சுட்டுக் கொன்று, கொள்ளையடித்து சென்றது. வழக்கு காலத்தில் ராதே உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர். ஒருவர் சிக்கவில்லை. எஞ்சிய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

நம்பர் சேமிக்காமல் வாட்ஸ்அப் கால் பண்ண முடியுமா?

image

கான்டாக்டில் நம்பரை சேமிக்காமலேயே வாட்ஸ்அப்பில் கால் செய்ய முடியும். அது எப்படி எனத் தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப்பில் CALL பகுதிக்கு சென்று + என்பதை அழுத்த வேண்டும். இதையடுத்து, அங்கு திரையில் வரும் Call a Number என்பதை கிளிக் செய்தால், டயல் பேட் தோன்றும். இப்போது அதில் உங்களுக்கு தேவைப்படும் நம்பரை கொடுத்து டயல் செய்து பேசலாம். நம்பரை சேமிக்க வேண்டியதில்லை.

News March 18, 2025

ஐபிஎல்: அதிக ரன், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார்?

image

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் யார் என பார்க்கலாம். ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி, 17 சீசன்களிலும் ஒரே அணிக்காக 252 போட்டிகள் விளையாடி 8,004 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 8 சதங்கள், 55 அரைசதங்களும் அடங்கும். இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச ரன்கள் ஆகும். மும்பை, ஆர்ஆர், ஆர்சிபி அணிகளுக்காக 160 போட்டிகள் சாஹல் விளையாடி 205 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

error: Content is protected !!