News May 10, 2024

தேர்தல் பரப்புரையில் ஈடுபட கெஜ்ரிவாலுக்கு அனுமதி

image

ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம், தேர்தல் பரப்புரையில் ஈடுபடவும் அனுமதி வழங்கியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21இல் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவுகள் உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வகையில் ஜாமின் வழங்க வேண்டும் என்ற கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.

News May 10, 2024

BREAKING: கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் தேர்தலை காரணம் காட்டி ஜாமின் கோரி இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

News May 10, 2024

₹57 லட்சத்துக்கு அதிபதியான போகிமான் ரசிகர்

image

இங்கிலாந்தைச் சேர்ந்த போகிமான் ரசிகர், 1990 முதல் 2000 வரை அத்தொடரின் அனிமேஷன் அட்டைகளை சேகரித்து வைத்திருந்தார். அவரை அது தற்போது லட்சாதிபதியாக மாற்றியுள்ளது. அதாவது, அரிதான அந்த அட்டைகள் ஏலத்தில் வந்த நிலையில், இந்திய மதிப்பில் ₹57 லட்சத்துக்கு ஏலம் போனது. இது ஏலத்தின் ஆரம்ப தொகையைக் காட்டிலும் இருமடங்கு ஆகும். அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏலத்தில் பங்கேற்றனர்.

News May 10, 2024

ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்

image

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னர் முதல்முறையாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார். இதில், கடந்த ஆண்டை போல மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்க உள்ளார். ஜூன் மாதம் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர்களை சந்தித்த போது அண்ணா, பெரியார், காமராஜர் குறித்து பேசினார்.

News May 10, 2024

பொன்முடி ஜாமின் பெற அவகாசம் நீட்டிப்பு

image

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஜாமின் பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவருக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி இருவரும் ஜாமின் பெறலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

497 மதிப்பெண்கள் எடுத்த கூலித் தொழிலாளியின் மகள்

image

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், 497 மதிப்பெண்கள் எடுத்து கூலித் தொழிலாளியின் மகள் சாதித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜே.சுஸ்யா, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும், தமிழில்-98, ஆங்கிலத்தில்-99 என எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு ஆசிரியர்கள மற்றும் சக மாணவிகள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

News May 10, 2024

வட மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டம்: ராமதாஸ் கோரிக்கை

image

ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும்தான் வட மாவட்டங்களில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்க காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக, பொருளாதார காரணிகளும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைக் குறைத்துள்ளதாகவும், வட மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

News May 10, 2024

கே.எல்.ராகுல் கேப்டனாக தொடர்வார்

image

எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில், கே.எல்.ராகுல் கேப்டனாக தொடர்வார் என LSG அணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். SRH-க்கு எதிரான போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் LSG படுதோல்வி அடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அணியின் உரிமையாளர், கே.எல்.ராகுலை சரமாரியாக திட்டினார். இதனால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாகத் தகவல் பரவிய நிலையில், அவர் கேப்டனாகவே தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

களத்தில் தோனி நிச்சயம் வேண்டும்

image

தோனிக்கு மாற்றாக வேறு கீப்பர் அணியில் இருந்தாலும், அவர் தோனி ஆகிவிட முடியாது என CSK பயிற்சியாளர் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது என்றும், அதனால் தான் 2-4 ஓவர்கள் மட்டும் பேட்டிங் செய்துவிட்டு முழுநேரம் கீப்பிங் செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், களத்தில் தோனி நிச்சயம் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News May 10, 2024

இந்தியா மீது அணுகுண்டு வீசுவார்கள்: மணிசங்கர் அய்யர்

image

பாகிஸ்தானை மதிக்காவிட்டால், அந்நாடு நம் மீது அணுகுண்டு வீசும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், பாகிஸ்தான் உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார். மாறாக, அண்டை நாடுகளை மதிக்காமல் ராணுவ பலத்தை காட்ட நினைத்தால், பதற்றம்தான் ஏற்படும் எனக் கூறிய அவர், பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதாக எச்சரித்தார்.

error: Content is protected !!