News May 11, 2024

இந்துக்களின் சார் தாம் யாத்திரை (2)

image

யமுனோத்ரி கோயில், உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருந்து 129 கி.மீ. தொலைவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,164 மீட்டர் உயரத்தில் இமயமலை அடிவாரத்தில் யமுனை நதிக்கரையோரம் இக்கோயில் உள்ளது. கோயில் தெய்வமாக யமுனா மாதா உள்ளார். இக்கோயிலுக்கு உத்தரகாசி, ரிஷிகேஷ், ஹரித்வார், டேராடூனில் இருந்து செல்ல முடியும். கோயிலுக்கு குறிப்பிட்ட தூரம் வாகன பயணமும், பிறகு மலையேற்றமும் செய்ய வேண்டும்.

News May 11, 2024

இந்துக்களின் சார் தாம் யாத்திரை (1)

image

நாடு முழுவதும் இந்துக்களின் புனித தலங்கள் ஏராளமாக உள்ளன. அதில் முக்கிய தலங்களாக, இமயமலை அடிவாரத்தில் உத்தராகண்டில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் உள்ள கோயில்கள் கூறப்படுகின்றன. கடும் பனிப்பொழிவால், குளிர் காலத்தில் மூடப்பட்டு கோடை காலத்தில் இக்கோயில்கள் திறக்கப்படும். அப்போது 4 கோயில்களுக்கும் பக்தர்கள் செல்லும் யாத்திரை, ‘சார் தாம்’ யாத்திரை எனப்படுகிறது.

News May 11, 2024

சாய் சுதர்ஷன் குறித்து அதிகம் பேச வேண்டும்

image

GT அணியின் வீரர் சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டுமென தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், “நட்சத்திர வீரராக இருக்கும் சுதர்சன் மக்களின் ரேடாரின் கீழ் இருக்கிறார். ஐபிஎல் தொடர்களில், அதிவேகமாக 1000 ரன்களை அவர் கடந்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு அதிக வாய்ப்புகள் அளிக்க வேண்டும்” எனக் கூறினார்.

News May 11, 2024

தவெக தலைவர், நிர்வாகிகள் நியமனம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய், அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாளர் – வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா நியமிக்கப்பட்டுள்ளனர்.

News May 11, 2024

பாலிவுட்டின் பதற்றத்தைக் கூட்டிய மாளவிகா

image

ரஷ்மிகாவைப் போல பாலிவுட்டில் தானும்
வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என மாளவிகா மோகனன் விரும்புவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. சித்தாந்த் சதுர்வேதிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘யுத்ரா’ படம் விரைவில் வெளிவரவுள்ளது. இப்படம் ரிலீசாவதற்கு முன்னரே அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய கதைகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்துவருவதால், பாலிவுட்டின் பதற்றம் கூடியிருக்கிறது.

News May 11, 2024

2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ₹1 லட்சமாகும்

image

2030ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ₹1 லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “தங்கம் வாங்க மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய திருதியை நாளில் மட்டும் 25,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. இதே நிலை தொடரும் என்பதால் 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு சவரன் தங்கம் ₹1 லட்சம் என்ற அளவில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

News May 11, 2024

விண்வெளியை குப்பை மேடாக மாற்றிய மனிதன்

image

உலகளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள், விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்றுவரை சுமார் 8,000 செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், தற்போது 3,000 செயற்கைக் கோள்கள்தான் இயங்குகின்றன. மீதமுள்ள செயல்படாத செயற்கைக் கோள்கள், குப்பைகளாக (ஏறத்தாழ 9,000 மெட்ரிக் டன்) விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கின்றன.

News May 11, 2024

3ஆம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு

image

மக்களவைக்கான 3ஆம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 93 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்து ஏற்கெனவே 2 முறை புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, 3ஆவது முறையாக வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், மொத்தம் 65.68% வாக்குகள் பதிவானதாகவும், அதில் 66.89% ஆண்கள் , 64.41% பெண்கள், 25.2% மூன்றாம் பாலினத்தவர் எனக் கூறியுள்ளது.

News May 11, 2024

புதிய ஜெர்சியில் கலக்கும் இலங்கை அணி

image

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் புதிய ஜெர்சியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில், “உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான எங்கள் அணியின் புதிய ஜெர்ஸி இங்கே. #LankanLions” என குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் தேசியக்கொடியில் உள்ள சிங்கம் பொறிக்கப்பட்ட நீல நிறத்திலான இந்த புதிய ஜெர்ஸி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

News May 11, 2024

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரசுக்கு கிடைக்காது

image

2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிஷாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்று கூறினார். மேலும், ஒடிஷாவில் பாஜக வென்று ஆட்சியமைக்கும் என்றும், மண்ணின் மைந்தர் ஒருவரை பாஜக முதல்வராக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!