India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், நெட்மெட்ஸ் என்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனத்தை தற்போது நடத்தி வருகிறது. இதையடுத்து, ₹12,52,740 கோடி புழங்கும் மருத்துவ பரிசோதனை தொழிலில் கால்பதிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், நாடு முழுவதும் மருத்துவ பரிசோதனை நிலையங்களை நடத்திவரும் ஏதேனும் ஒரு நிறுவன பங்குகளை ₹1000 கோடி-₹3000 கோடிக்கு வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியானது. அதில் நாட்டிலேயே அதிகபட்ச மதிப்பெண் (99.91) திருவனந்தபுரத்தில் பதிவாகியுள்ளது. விஜயவாடாவில் 99.0%, சென்னையில் 98.47% மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இந்நிலையில், 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்.15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் இன்று மக்களவைத் தொகுதிகளுக்கும், மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதையொட்டி தேர்தல் ஆணையத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாகர்குர்னூலில் வாழும் சென்சு பழங்குடியின மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச் சாவடிகளை அவர்கள் வசிப்பிடம் அருகிலேயே தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது. அதனால் அவர்கள், அந்த சாவடிகளிலேயே வாக்களித்தனர்.

ஐபிஎல் தொடரின் 63ஆவது லீக் போட்டியில் இன்று குஜராத் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் போட்டியில் நடக்க இருந்த சூழலில், அங்கு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மைதானம் முழுவதும் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து நீடித்து வருவதால் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் சோகத்துடன் மைதானத்தில் காத்துக் கிடக்கின்றனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று காலை முதலே சரிவை சந்தித்தது. வர்த்தக நேரத்தின்போது தேசிய பங்குச்சந்தையில் ஒரு பங்கின் மதிப்பு 9.44% வீழ்ச்சியடைந்து ₹948ஆக இருந்தது. மாலையில் வர்த்தக நேர முடிவில் 8.34%ஆக குறைந்தது. முடிவில் ஒரு பங்கின் விலை ₹959.80ஆக நிலை கொண்டது. இந்த வீழ்ச்சியால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இன்று ஒரே நாளில் ₹29,016 கோடி இழப்பு ஏற்பட்டது.

எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, பட்டாசு படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், கருடன் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, வடிவுக்கரசி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான டைட்டில் க்ளிம்ஸ், டிரைலர் வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில், படம் வருகிற 31ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட OTT செயலிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதை கவனத்தில் கொண்டும், அந்நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையிலும், OTT சேவையை மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் ஆகஸ்டில் தொடங்க இருப்பதாகவும், அதில் குடும்ப நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருப்பதாகவும், முதலில் 1 அல்லது 2 ஆண்டுகளுக்கு இலவச சேவை அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘கல்லூரி கனவு’ திட்டத்தின் 2ஆம் கட்ட நிகழ்ச்சி நாளை தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. +2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு உதவும் வகையில், மாவட்டந்தோறும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி, அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், +2 முடித்த SC, ST மாணவர்கள் பயன்பெறும் வகையில், நாளை முதல் மே 21ஆம் தேதி வரை 2ஆம் கட்ட நிகழ்ச்சி நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் 1982ஆம் ஆண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை பயன்படுத்தி, ரவுடிகள், தொடர் குற்றவாளிகள், சைபர் குற்றவாளிகள், போதை பொருள் கடத்துவோர், மணல் கடத்துவோர், பாலியல் குற்றவாளிகள், திருட்டு வீடியோ தயாரிப்போர் உள்ளிட்ட 10 குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்யலாம். குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒருவரை விசாரணையின்றி 1 வருடம் வரை சிறையில் அடைக்கலாம்.

1982இல் குண்டர் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, 5 குற்றங்களில் ஈடுபடுவோர் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். பிறகு 1988ல் வனக் குற்றவாளிகள், 2004இல் திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள், 2006இல் மணல் கடத்தல்காரர்கள், 2014இல் பாலியல் குற்றவாளிகள் சேர்க்கப்பட்டனர். 2014 சட்டத்திருத்தம் மூலம், “தொடர்” என்ற வார்த்தை நீக்கப்பட்டு, முதலில் குற்றம் செய்வோரையும் கைது செய்ய வகை செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.