India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் வாட்ஸ்ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 500 யூனிட் பயன்படுத்தும் பயனர்களின் பதிவு செய்யப்பட செல்போன் எண்ணிற்கு ‘94987 94987’ என்ற எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பப்படும். அதில், View, Pay Bill லிங்க் இருக்கும். View பக்கத்தில் மின் பயன்பாடு, கட்டண விவரம் இருக்கும். Pay bill அழுத்தினால் UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.

இடைக்கால ஜாமினில் வெளியே வந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வென்றாலும், மோடி பிரதமராக மாட்டார், அமித் ஷாவே பிரதமராவார், யோகி ஆதித்யநாத் 3 மாதங்களில் நீக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார். இதனால் 400 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம் என பிரசாரம் செய்து வந்த பாஜக தலைவர்கள், மோடியே அடுத்த பிரதமர் என பிரசாரம் செய்கின்றனர்.

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம், 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எதார்த்தமான கதைக்களத்தில் உருவான இப்படம், நல்ல வசூலையும் ஈட்டியது. இந்நிலையில், படத்தை 4 இந்திய மொழிகளிலும், 1 சர்வதேச மொழியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

ரோஹித் ஷர்மாவின் உரையாடல் எதையும் பதிவு செய்யவில்லை என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது. தனது உரையாடலை அனுமதியின்றி வெளியிட்டதாக அந்நிறுவனம் மீது ரோஹித் ஷர்மா நேற்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம், ரோஹித் ஷர்மா பேசியது வீடியோவாக பதிவானதே தவிர, ஆடியோ பதிவு செய்யப்படவில்லை என்றும், தங்கள் நிறுவனம் வீரர்களின் உரிமைகளுக்கு மரியாதையளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், மீட்புக் குழு தயாராக இருப்பதாக பேரிடர் மேலான்மை துறை தெரிவித்துள்ளது. நெல்லை, குமரி, கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களில் 10 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறியுள்ள பேரிடர் மேலாண் துறை, SMS மூலம் மக்களை எச்சரித்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், கனமழையை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டார். அவருக்கு கவுன்டிங் ஏஜெண்டுகளாக பணியாற்ற 600 பேருக்கு அடையாள அட்டை அளிக்க அவர் சென்றுள்ளார். அப்போது அட்டைகளில் கையெழுத்து போட்டு விட்டு, செலவுக்கு எதுவும் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டதற்கு, கையில் இருந்து செலவழிக்கும்படியும், தேர்தலுக்கு பிறகு தன்னிடம் வாங்குமாறும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் சூழலில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். இத்தேர்தலில் மகன் வெற்றி பெற்றால், கட்சியை மேலும் வலுப்படுத்தலாம், இல்லையெனில், அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 15- 20 தொகுதிகளை கேட்டு பெற்று கட்சியை வலுப்படுத்தலாம் என பிரேமலதா புது கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிதாக 2.30 லட்சம் பெண்களை, தமிழக அரசு இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இந்தத் திட்டத்தில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ₹1000 வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய பயனாளர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள், ஜூன் மாதம் முதல் விநியோகிக்கப்படும் எனக் கூறியுள்ள திட்ட அதிகாரிகள், அதன் மூலம் புதிய பயனாளர்களை சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத விஜய்யின் த.வெ.க. கட்சி, வேறு எந்த கூட்டணிக்கும் ஆதரவும் அளிக்கவில்லை. அறிக்கை மூலமே தனது கருத்தை விஜய் வெளிப்படுத்தி வருகிறார். இதனால் லெட்டர் பேடில் அவர் கட்சி நடத்துகிறாரா என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவு வெளி வந்ததும், த.வெ.க. மாநாடு நடத்துவது குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
Sorry, no posts matched your criteria.