India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

*மேஷம் – செலவு அதிகரிக்கும்
*ரிஷபம் – ஆதாயம் ஏற்படும்
*மிதுனம் – பண வரவு உண்டாகும்
*கடகம் – தடங்கல் ஏற்படும்
*சிம்மம் – நன்மை கிடைக்கும்
*கன்னி – சுகமான நாள்
*துலாம் – நற்பெயர் ஏற்படும்
*விருச்சிகம் – உடல் நலனில் முன்னேற்றம்
*தனுசு – கீர்த்தி உண்டாகும்
*மகரம் – உழைப்புக்கேற்ற பலன் *கும்பம் – உதவிகரமான நாள் *மீனம் – அலைச்சல் அதிகரிக்கும்

தமிழகத்தில் காவிரி உரிமையை அனைத்து விதத்திலும் அரசு நிலைநாட்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கேரளா, கர்நாடகா காவிரி வடிநிலத்தில் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றி கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், காவிரி தீர்ப்பினை மீறும் விதமாக கேரள, கர்நாடக அரசுகள் செயல்பட்டால் தமிழக அரசு உறுதியோடு எதிர்க்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மைசூரில் பணிபுரியும் ஊட்டி தம்பதியினர், கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். மனைவி பொய் குற்றச்சாட்டு கூறுவதாக மைசூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் விவாகரத்து மனுவை கணவர் திரும்ப பெற்றார். பிறகு 2வதாக தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து செய்த மேல்முறையீடை விசாரித்த உயர்நீதிமன்றம், கொடுமை குற்றச்சாட்டின்கீழ் 2ஆவது முறை மனு செய்வதில் தவறில்லை எனக்கூறி விவாகரத்து அளித்தனர்.

சென்னையில் நேற்று ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஈக்காட்டுதாங்கல் அருகே கணேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் ப்ளாட்பாரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா என்பவர், தனது கையில் வைத்து இருந்த ஆசிட் பாட்டிலை வீசியதில் கணேஷின் 5 வயது மகள் காயமடைந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கிண்டி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ராஜாவை கைது செய்தனர்.

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல என்று மோடி தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், அனைத்து மதத்தினரையும் ஒன்றாகவே பாஜக கருதுவதாகவும், யாரையும் உயர்ந்த குடிமக்களாக கருதவில்லை என்றும் கூறியுள்ளார். பாஜகவுக்கு மக்களின் மிகப்பெரிய ஆதரவு இருப்பதாகவும், அதனால் இந்த மக்களவைத் தேர்தலில் சாதனை எண்ணிக்கையில் பாஜக வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தலை மற்றும் கழுத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதே முக்கிய காரணம் என்றும், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பல்வேறு விதங்களில் புகையிலைகளை எடுத்து வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக புகையிலை மற்றும் மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 8 மாநிலங்களில் நடந்த வாக்குப்பதிவில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 73.00% வாக்குகளும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 48.88% வாக்குகளும் பதிவாகியுள்ளன. பிஹார்- 52.60%, காஷ்மீர்- 54.49%, ஜார்கண்ட்- 63.00%, லடாக்- 67.15%, ஒடிஷா- 60.72%, உ.பி. – 57.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கேரளாவில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் செயல் தமிழகத்தை பாலைவனமாக்கும் சூழ்ச்சி என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்செய்தி தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதாக கூறிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழக ஆற்று நீர் உரிமை பறிபோவது தொடர் கதையாகிவிட்டதாக விமர்சித்துள்ளார். அத்துடன், நதிநீர் உரிமை பறிபோகாமல் உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. திருச்சி, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக, சமயபுரம் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 செ.மீ., அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாரியம்மன் கோயிலைச் சுற்றி சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.