India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

5ஜி ஏலத்திற்கான இறுதிக்கட்ட ஏலதாரர்களின் பட்டியலை தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பேண்ட் பிரிவுகளில் பாரதி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, ஜியோ ஆகியவை ₹96,317.65 கோடி மதிப்பிலான 10,523.15 MHz அளவிலான 5ஜி அலைக்கற்றையைப் பெற இறுதி ஏலதாரர்களாக தேர்வாகியுள்ளனர். இதில், ஜியோ ₹3,000 கோடி, ஏர்டெல் ₹1,050 கோடி, வோடாபோன் ஐடியா ₹300 கோடி முன் வைப்புத் தொகை செலுத்த முன் வந்துள்ளன.

பாஜக கூட்டணிக்கு ஆதரவான அலை அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜக தலைமையில் வலுவான மத்திய அரசு அமைய மக்கள் முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், ‘I.N.D.I.A’ கூட்டணியின் வாக்குவங்கி அரசியலை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வெயில் வாட்டிய நிலையில், தற்போது கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது. இதனால், காய்கறிகளின் வரத்து வெகுவாகக் குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பூண்டு ₹400, பீன்ஸ் ₹300, இஞ்சி ₹200, மிளகாய் ₹100, கேரட் ₹90, உருளைக்கிழங்கு ₹80, பீட்ரூட் ₹76, சின்ன வெங்காயம் ₹76, பெரிய வெங்காயம் ₹40, கத்தரிக்காய் ₹75, முட்டைகோஸ் ₹50, முருங்கைக்காய் ₹65, தக்காளி ₹44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் 14ஆவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி குறித்து முடிவெடுக்கப்பட்டது. முன்னதாக, துணை அதிபர் முகமது முக்பர் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள சர்வதேச தமிழ்ப் படிப்பகம், (International Institute of Tamil Studies) 5 ஆண்டுகள் பயிலக் கூடிய முதுநிலை (M.A) தமிழ்ப் பட்டப்படிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கை இந்தாண்டு முதல் தொடங்கவிருக்கிறது. தஞ்சாவூர் தமிழ் படிப்பகத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த பட்டப்படிப்பைத் தொடங்கியிருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 7ஆம் தேதி வரை பெறப்படும்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 105 மாணவர்கள் சர்ஜரி தேர்வுகளில் தோல்வியடைந்துள்ளனர். இதனால், அக்கல்லூரியின் தேர்ச்சி சதவீதம் 55 ஆக குறைந்துள்ளது. மொத்தம் 250 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், சர்ஜரி தேர்வுகளில் மட்டும் 105 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் குறித்து கல்லூரி நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கால் தசை நார் அறுவை சிகிச்சைக்காக தோனி லண்டன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனுடன் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 மாதங்களுக்குப் பின் முடிவை அறிவிப்பதாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறியிருந்தார். ஆகையால், அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் தனது ஓய்வு குறித்த முக்கிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீருக்குப் பின் உலகளவில் அதிகம் அருந்தப்படும் பானம் தேநீர்தான். அதனைக் கொண்டாடும் விதமாக இன்று (மே 21) சர்வதேச ‘டீ’ தினம் கடைபிடிக்கப்படுகிறது. சோர்வைப் போக்க டீ, தூக்கத்தைப் போக்க டீ, மகிழ்ச்சியைக் கொண்டாட டீ, நண்பர்களுடன் சந்திப்புக்கு டீ, ஓய்வு நேரத்தில் டீ என்று தேநீர் குடிப்பதற்கு எந்தவொரு கால நேரமும் தேவையில்லை. டீ குடிப்போம்., உற்சாகத்தைப் பரப்புவோம்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான வரலாற்றுப் பகையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேல் இந்த சதியை செய்திருக்கலாம் என யூகிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.