India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி இன்று பூஜையுடன் தொடங்கியது. மாநில அரசு நேற்று சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய நிலையில், கட்டுமான பணிகளை தொடங்கியதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, விடுதி ஆகியவை கட்டப்படுகிறது. 18 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்பட உள்ளது. 2019ல் பிரதமர் மோடி இதற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் மே 21 வரை 105.5மி.மீ என்ற அளவில் பதிவாகும் மழையளவு, இந்த வருடம் 114.7மி.மீ என்ற அளவில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், மழை அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை விமர்சித்த முன்னாள் நீதிபதியும், பாஜக வேட்பாளருமான அபிஜீத் கங்கோபாத்யா 1 நாள் பரப்புரையில் ஈடுபட
தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் அவரின் பேச்சு இருந்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, மம்தா பானர்ஜியின் விலை என்ன? என்று சர்ச்சையான கருத்தை அபீஜித் பரப்புரையின் போது கூறியிருந்தார்.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், குமரி, செங்கல்பட்டு, கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கோவையில் மழை பெய்ய உள்ளது.

‘G.O.A.T’ படத்திற்கான VFX பணிகளை முடித்துவிட்டு, நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். இப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதால், இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம், 10, +2 வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. விஜய்யின் டப்பிங் பணிகள் 50% முடிந்துவிட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பும் நிறைவுபெற உள்ளது.

ராகுல் காந்தியை புகழ்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நன்றி தெரிவித்துள்ளார். செல்லூர் ராஜூ பகிர்ந்த வீடியோவை பதிவிட்டு ‘அண்ணனுக்கு நன்றி’ என அவர் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராகுலை செல்லூர் ராஜூ புகழ்ந்தது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை கிளப்பிய நிலையில், சாதாரணமாகவே ராகுலை பாராட்டியதாக அவர் விளக்கமளித்திருந்தார்.

2017ஆம் ஆண்டு இதே நாளில், மும்பை அணி 3ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. புனே அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், முதலில் ஆடிய MI அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய புனே அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது, அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஜான்சன் 1 ரன் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தார்.

இடைக்கால ஜாமின் கோரி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நில மோசடி புகாரில் ED அதிகாரிகளால் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கெஜ்ரிவால் போன்று தானும் பரப்புரையில் ஈடுபட இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு, நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, தருமபுரி மாவட்டங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. ஏற்கெனவே இன்று கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். கருடன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சீரியஸான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களால் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்றும், ஆனால், காமெடி நடிகர்களால் எவ்வளவு சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், நடிகர் சூரி அதற்கு ஒரு எடுத்துக்காட்டு என பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.