News May 21, 2024

ட்விட்டரை விரும்பாத தோனி

image

ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் பயன்படுத்தவே அதிகம் விரும்புவதாக CSK வீரர் தோனி கூறியுள்ளார். துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ட்விட்டரில் எந்தவொரு நல்ல விஷயமும் நடந்தது கிடையாது என்றும், ட்விட்டரில் ஏதாவது பதிவிட்டால் அதை பல வகையில் திரித்து சர்ச்சையாக்கி விடுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், இன்ஸ்டாவில் ஏதாவது ஒரு வீடியோவை பதிவிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

News May 21, 2024

எஸ்.ஆர்.சேகர் வீட்டில் திடீர் சோதனை

image

ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து பேசிய அவர், விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரியிருந்ததாகவும், அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டிருந்த நிலையில், திடீர் சோதனை நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார். பாஜகவை கலங்கப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் எனவும் விமர்சித்தார்.

News May 21, 2024

செருப்பு வியாபாரி வீட்டில் சிக்கிய ₹100 கோடி

image

உ.பி., ஆக்ராவில் ராம்நாத் டாங்கி என்பவரது வீட்டிலிருந்து ₹40 கோடி ரொக்கம் + 60 கோடி தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 3 காலணி வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்தியது. இதில் அவரது வீட்டில் படுக்கைகள், அலமாரிகள் மற்றும் பைகளில் ₹500 நோட்டுக் கட்டுகள் சிக்கியது. படுக்கையறை முழுவதும் ₹500 கட்டுகளால் நிரம்பி இருக்கும் காட்சியை பார்த்து அதிகாரிகள் வியந்தனர்.

News May 21, 2024

தனித்துவமான சாதனை படைத்த அபிஷேக் ஷர்மா

image

SRH வீரர் அபிஷேக் ஷர்மா, நடப்பு ஐபிஎல் தொடரில் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். 13 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒவ்வொரு போட்டியிலும் 30க்கும் குறைவான பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில், இதுவரை எந்தவொரு வீரரும் இந்த சாதனையை செய்ததில்லை. மேலும், இந்த சீசனில் அதிக சிக்சர்கள் (41 Sixes) அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

News May 21, 2024

அதிமுக மீது அதிருப்தியில்லை : செல்லூர் ராஜூ

image

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி என செல்லூர் ராஜு புகழ்ந்தது அரசியல் ரீதியாக பேசுப்பொருளாக மாறியது. இதுகுறித்து அவர், எல்லோரிடமும் எளிமையாக பழகும் தலைவர் என்பதால் ராகுலை புகழ்ந்தேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கமளித்தார். மேலும், அதிமுகவில் உங்களுக்கு ஏதேனும் அதிருப்தி இருக்கா? என்ற கேள்விக்கு, எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை எனவும் தெளிவுப்படுத்தினார்.

News May 21, 2024

மின்சாரத்தை பிடுங்கினாரா முன்னாள் மனைவி?

image

ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாசுக்கும், அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் இணைந்து வாங்கிய தையூர் பங்களாவில் ராஜேஷ் தாஸ் தனியாக வசித்து வருகிறார். அங்கு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதற்கு பீலாதான் காரணம் என்றும் ராஜேஷ் தாஸ் குற்றம்சாட்டுகிறார். தான் வசிக்காத வீட்டில் மின்சாரத்திற்கு செலவு செய்ய விரும்பாததால் இணைப்பை துண்டிக்கச் சொன்னதாக பீலா கூறுகிறார்.

News May 21, 2024

பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவானது எப்படி?

image

பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெயர்களை உள்ளடக்கி 2001இல் பிரிக் (BRIC) கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு என்ற பெயர் பெற்றது. நடுத்தர வருவாயைக் கொண்ட, அதே நேரம் வேகமான பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உறுப்பு நாடுகளாக ஆர்வம் தெரிவித்து வருகின்றன.

News May 21, 2024

இந்தியா உதவியை நாடும் இலங்கை

image

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய இலங்கை ஆர்வம் தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் குழுவில் இணைய, இந்தியாவின் உதவியை நாடவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார். எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், UAE ஆகிய நாடுகள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்திருப்பது பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரம் மற்றும் பங்களிப்பின் வலுவான அறிகுறியாகும் என்றார்.

News May 21, 2024

4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

News May 21, 2024

ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது

image

கனமழைக்காக தேனி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு எந்த மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் இல்லை.

error: Content is protected !!