News May 22, 2024

உள்நாட்டில் உச்சம் தொட்ட வாகன விற்பனை

image

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியச் சந்தையில் பயணிகள் வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சியாம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2023 ஏப்ரலில் 3,31,278ஆக இருந்த பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த ஏப்ரலில் 1.3% உயர்ந்து 3,35,629ஆக உள்ளது. 11,28,192 மோட்டார் சைக்கிள்கள், 5,81,277 ஸ்கூட்டர்கள், 49,116 முச்சக்கர வாகனங்கள், 96,357 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

News May 22, 2024

பிரதமர் மோடி பொய்யை மட்டுமே பேசுகிறார்

image

பொய்யை மட்டுமே பேசும் பிரதமர் மோடி இன்று பேசுவதை நாளை மறந்துவிடுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பேசவில்லை என்று பிரதமர் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அவர், காங்கிரஸ் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாகவும், இந்துக்களின் சொத்துகளை பறித்துவிடுவார்கள் என்றும் மோடி பிரசாரம் செய்ததாகக் கூறினார்.

News May 22, 2024

கோடை மழையால் ஏற்படும் சளி தொல்லை நீங்க…

image

கோடைக்காலத்தில் பொழியும் மழையால் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க தூதுவளை தேநீரை பருகலாம். தூதுவளை, துளசி, அதிமதுரம் ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்தால் தேநீர் தயார். இதனை காலை – மாலை இருவேளை 3 நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News May 22, 2024

Qualifier 2: RR – RCB அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை

image

2024 ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டிக்கான Qualifier 2 சுற்றில் RR – RCB அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் RR 13 முறையும், RCB 15 முறையும் வென்று இருக்கின்றன. இரு அணியிலும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 22, 2024

இ.வி.எம் மெஷினை வைத்து பாஜக வென்றுவிடும்

image

மக்களவைத் தேர்தலில் இ.வி.எம் மெஷினை வைத்து பாஜக வென்றுவிடும் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். கொடைக்கானலில் செய்தியாளரிடம் பேசிய அவர், “மத வெறியை தூண்டிவிடும் பாஜகவிடம் பணம் பெற்றுதான், நான் வேலூர் தொகுதியில் போட்டியிட்டதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாஜகவிடம் பணம் பெற்றதை ஆதாரத்தோடு நிரூபித்துவிட்டு வந்து, கோடாரியால் என்னுடைய தலையை இரண்டாக வெட்டுங்கள்” என்று ஆவேசமாக கூறினார்.

News May 22, 2024

மே 22 வரலாற்றில் இன்று!

image

➤1848 – மர்தீனிக்கில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ➤1900 – நியூயார்க்கில் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. ➤1958 – இலங்கையில் சிங்களவர்கள் நடத்திய இனக் கலவரத்தில் 300 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். ➤1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. ➤2011 – பத்திரிகையாளர் சின்ன குத்தூசி மறைந்த நாள். ➤2018 – ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய 13 பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News May 22, 2024

₹11,526 கோடி நிகர லாபம் ஈட்டிய ஓஎன்ஜிசி

image

2023-24 Q4 காலாண்டில், ஆசியாவின் முன்னணி பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஓஎன்ஜிசி (ONGC) நிகர லாபமாக ₹11,526 கோடியை ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ₹6,478..23 கோடியாக இருந்த நிகர லாப மதிப்பு தற்போது 78% உயர்ந்துள்ளது. அதேபோல், மதிப்பீட்டுக் காலாண்டில் அந்நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி 4.3% அதிகரித்து 47.1 லட்சம் டன்னாக உள்ளது கவனிக்கத்தக்கது.

News May 22, 2024

MI அணியின் ஒற்றுமையை உறுதி செய்திருக்க வேண்டும்

image

MI அணியினர் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்பதை மூத்த வீரர்கள் உறுதி செய்திருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “MI அணி நிர்வாகம் சிறப்பானதுதான். ஆனால், கேப்டன்ஸி குறித்த நிர்வாகிகளின் முடிவு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கலாம். இதில் அவரது தவறு எதுவும் இல்லை” என்றார்.

News May 22, 2024

நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கை

image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞர் கரிம் கான் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கைக்கு பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கு நெதன்யாகு உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த நடவடிக்கையை யூத விரோதம் என்று விமர்சித்துள்ளனர்.

News May 22, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து
▶ எண்: 10
▶குறள்:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
▶பொருள்:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் திருவடிகளை தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

error: Content is protected !!