India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2024 ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டிக்கான Qualifier 1 சுற்றில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற KKR அணி முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது. அதே நேரத்தில், தோல்வி அடைந்த SRH-க்கு இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு இப்போதும் உள்ளது. அதாவது, இன்று நடக்கும் Eliminator இல் வெல்லும் அணியுடன் (RR அல்லது RCB) SRH அணி மோதும். அதில், SRH அணி வென்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

*பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சி அமைப்பார் – பிரசாந்த் கிஷோர்
*இந்தியாவில் ராம ராஜ்யம் நிறுவப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங்
*சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தை பசுமை பூங்காவாக மாற்ற வேண்டும் – அன்புமணி
*2023-24 Q4 காலாண்டில், ஓஎன்ஜிசி நிகர லாபமாக ₹11,526 கோடியை ஈட்டியுள்ளது.
*உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார்.

✍தலை துண்டிக்கப்படும் ஒருவரின் முடி உதிர்வதற்காக நீங்கள் புலம்பாதீர்கள். ✍வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதைதான் புரட்சிகர வரலாறுகள் காட்டுகின்றன். ✍கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் விளைவு அதைப் பிரயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. ✍வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல; வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது. ✍ராணுவத்தில் முன்னேறுவதை விட பின்வாங்குவதற்கு அதிக தைரியம் தேவை.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லுபடியாகும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பை
மறு ஆய்வு செய்யக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “தீர்ப்பில் பிழை இல்லாததால், அதை மறுஆய்வு செய்ய எந்தத் தேவையும் இல்லை” என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட கட்சிதான் காங்கிரஸ் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். பாட்னாவில் பேசிய அவர், “பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடும் என்று காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது. நாட்டில் எமர்ஜென்சியை கொண்டுவந்த காங்கிரஸ் அரசமைப்புச் சட்டத்தைக் காப்பது குறித்துப் பேசுவதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

▶மே – 22 ▶வைகாசி – 09
▶கிழமை: புதன் ▶திதி: சதுர்த்தசி
▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶எமகண்டம்: காலை 07:30 – 09:00 வரை
▶குளிகை: பகல் 10:30 – 12:00 வரை
▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

உலக பொருளாதார மன்றத்தின் (WEF) நாடுகளுக்கு இடையிலான பயணம் & சுற்றுலா வளர்ச்சிப் பட்டியலில் 39ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை WEF சார்பில் உலகளவில் சுற்றுலா வளர்ச்சி சார்ந்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2024 ஆண்டுக்கான பட்டியலில், செலவின குறியீட்டில் 18ஆவது இடமும், விமானப் போக்குவரத்தில் 26ஆவது இடமும் பிடித்துள்ளது. உள்கட்டமைப்பில் 25ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியச் சந்தையில் பயணிகள் வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சியாம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2023 ஏப்ரலில் 3,31,278ஆக இருந்த பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த ஏப்ரலில் 1.3% உயர்ந்து 3,35,629ஆக உள்ளது. 11,28,192 மோட்டார் சைக்கிள்கள், 5,81,277 ஸ்கூட்டர்கள், 49,116 முச்சக்கர வாகனங்கள், 96,357 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பொய்யை மட்டுமே பேசும் பிரதமர் மோடி இன்று பேசுவதை நாளை மறந்துவிடுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பேசவில்லை என்று பிரதமர் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அவர், காங்கிரஸ் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாகவும், இந்துக்களின் சொத்துகளை பறித்துவிடுவார்கள் என்றும் மோடி பிரசாரம் செய்ததாகக் கூறினார்.

கோடைக்காலத்தில் பொழியும் மழையால் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க தூதுவளை தேநீரை பருகலாம். தூதுவளை, துளசி, அதிமதுரம் ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்தால் தேநீர் தயார். இதனை காலை – மாலை இருவேளை 3 நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.