India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

RR-க்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வென்றிருக்கலாம் என RCB கேப்டன் டு பிளசி கூறியுள்ளார். தோல்வி குறித்து பேசிய அவர், தங்கள் வீரர்கள் உண்மையிலேயே கடினமாகப் போராடியதாகவும், பனி மற்றும் இம்பேக்ட் வீரர் விதி இருப்பதால் எதிரணிக்கு இந்த ஸ்கோர் போதாது என்றும் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து 6 போட்டிகளில் வென்றது மிகவும் பெருமையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு நேற்றிரவு 9.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் மோடிக்கு இந்தியில் கொலை மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். அந்த அழைப்பு மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய பிரதேசத்துக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பெல்ஜியத்தில் நடைபெற்ற FIH ப்ரோ லீக் போட்டியில், இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவுக்கு எதிரான இப்போட்டியில், இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. லலித் மந்தீப் தலா 1 கோல் அடித்தனர். ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. அதில், 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

லியோ, டாடா உள்ளிட்ட படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றிய விஷ்ணு எடவன், நடிகர் கவினை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், கவினுக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்திற்கு பிறகு, இப்படத்திற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

மத்தியில் இருந்து சர்வாதிகார அரசை அகற்றுவதே தங்களின் குறிக்கோள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். INDIA கூட்டணி குறைந்தபட்சம் 300 தொகுதிகளில் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், பாஜகவினர் எதேச்சதிகாரத்தை விரும்புவதாகவும், ஜனநாயகத்தை விரும்பவில்லை எனவும் குற்றம்சாட்டினார். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவே பாஜகவினர் 400 எம்பிக்கள் தேவை என கூறுவதாகவும் சாடினார்.

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் ரேஷன் பொருள்கள் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பரப்பு, பாமாயில் பாக்கெட் உள்ளிட்ட பொருள்கள் 100% விநியோகிக்கப்படும் எனவும் அரசு விளக்கமளித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில், RCB வீரர் மேக்ஸ்வெல் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 52 ரன்கள், 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். லீக் போட்டிகளில் சரியாக விளையாடாத அவர், பிளே-ஆப் போட்டியில் தன்னை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால், அடுத்த சீசனில் RCB அணியில் தொடருவது சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.

பிஹாரில் NDA கூட்டணி வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக களமிறங்கிய போஜ்புரி நடிகர் பவன் சிங், பாஜகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். வங்கத்தின் அசான்சோல் தொகுதியில் போட்டியிட இருந்த நிலையில் அவர் பாடிய திரைப்படப் பாடல்கள் பெண்களை இழிவுபடுத்தியதாக சர்ச்சையானதால், தேர்தலிருந்து விலகினார். இந்நிலையில், பிஹாரின் கரகாட் தொகுதியில் போட்டியிடுவதாக கூறிய நிலையில், பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தேனி, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

RR-க்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்ததால் ப்ளே – ஆஃப் சுற்றில் இருந்து RCB வெளியேறியது. இதனை CSK ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மே 18ஆம் தேதி நடந்த போட்டியில் CSK-வை வீழ்த்தியதை ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கு பழி தீர்க்கும் வகையில், CSK ரசிகர்கள் ட்ரோல் வீடியோக்கள், மீம்ஸ்களை ட்ரெண்டிங் செய்ய, அதற்கு RCB ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.