India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வெறும் 5 கட்டத் தேர்தலிலேயே I.N.D.I.A கூட்டணியின் கதை முடிந்து விட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஹரியானாவின் பிவானி பகுதியில் பிரசாரம் செய்த அவர், I.N.D.I.A கூட்டணியின் நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டதாகவும், அதனால் அவர்களுக்கு இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 3 கட்டத் தேர்தலிலேயே அவர்கள் தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி அழத் தொடங்கி விட்டதாகவும் அவர் கிண்டர் செய்தார்.

தோனி தொடர்ந்து விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடலாமா? வேண்டாமா? என்பதை தோனி தான் முடிவு செய்ய வேண்டும் என்ற அவர், தோனி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் நிச்சயம் மதிப்பளிப்போம் என்றார். காலில் தசைநார் பாதிப்பு தொடர்பான அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, தோனி தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ’கண்மணி’ பாடலை பயன்படுத்தியதற்காக நன்றி கூட தெரிவிக்கவில்லை என இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளருக்கு படம் சொந்தமாக இருந்தாலும், காப்புரிமை சட்டப்படி பாடல் இசையமைப்பாளருக்கே சொந்தம் என்றும் அவர் கூறினார். முன்னதாக, ‘கண்மணி’ பாடலை பயன்படுத்தியதற்காக மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சவுக்கு சங்கர் முதல்வரை ஒருமையில் அழைத்ததை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன்மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், ஒரு மாநிலத்தின் முதல்வரை எவ்வித வரையறை இன்றி ஒருவர் பேசுவதை எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். கருத்துரிமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக நீதிபதிகள் கூறினர்.

ரேஷன் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும் என, பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டிய கூட்டுறவுத்துறை, பணி நேரத்தில் ஒழுங்காக கடைகளை திறக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொறுமையை சோதிக்காமல் எங்கிருந்தாலும் பிரஜ்வால் ரேவண்ணா நாடு திரும்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரித்துள்ளார். பாலியல் புகார் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள தனது பேரன் பிரஜ்வாலுக்கு அவர் எழுதிய கடிதத்தில், எங்கிருந்தாலும் வந்து சட்டரீதியான விசாரணையை எதிர்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். தனது எச்சரிக்கையை காதில் வாங்காவிடில் குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் எனவும் கூறியுள்ளார்.

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் திருநாளையொட்டி, நாளை ஆளுநர் மாளிகையில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் வாழ்த்து கூறியதற்கு கண்டனம் எழுந்தது.

தமிழ்நாட்டில் பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்கள், ட்ரோன்களை தயாரிக்க கூகுள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கூகுள், தனது பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்களை இந்தியாவில் டிக்சன் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக, Google for India நிகழ்வில் பேசிய அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவில் கூகுள் பொருட்களை உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்.

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தன்னை கைது செய்தது பாஜகவுக்கு பின்னடைவை அளித்துள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். PTI செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தனது கைதுக்கு பின், ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரம் பாதிக்கப்படும், கட்சி சீர்குலையும், ஆட்சி கவிழும் என பாஜக நினைத்ததாகவும், ஆனால், அதற்கு நேர் மாறாக கட்சி பலமடைந்து, தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், சில பகுதிகளில் வழுக்கும் சூழலும் உருவாகக் கூடும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை இல்லாத சில கட்டடங்களில் லேசான சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.