India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். அங்கும் இடமில்லாமல் பலர் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில், நாளை காலை வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ஷாருக்கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். Heat stroke காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக்கான், கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, சென்னையில் நடக்கும் இறுதி போட்டியை காண அவர் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹரியானாவில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2009இல் காங்கிரஸ்10 தொகுதிகளில் 9இல் வென்றது. ஆனால், 2014 மற்றும் 2019 தேர்தலில் 7 இடங்களில் பாஜக வென்றது. குறிப்பாக, பாஜக 58% வாக்குகளை பெற்றது. அம்மாநில அரசியல் வரலாற்றில் எந்த கட்சியும் பெறாத வாக்குகளை பெற்ற பாஜக, இந்த முறை வெல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை மறுநாள் 10 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் பல பகுதிகளில் இரவிலும் கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம், திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தற்போது மழை பெய்கிறது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே, கோடை மழை முடியும் வரை நீர்நிலை, மின்சாரக் கம்பங்கள் அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ரோஹித்துடன் தொடக்க வீரராக விராட் கோலி களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளாா். கோலி தற்போது இருக்கும் ஃபார்மில், 17 ஆண்டு காலமாக இந்திய அணி வெல்ல முடியாமல் தவித்து வரும் டி20 உலகக் கோப்பையை பெற்று தர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என கோரியுள்ளார்.

1978இல் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, 1980களில் தமிழ் சினிமா நட்சத்திரமாக வலம் வந்தவர் சுதாகர். அதன்பிறகு சில படங்கள் தோல்வி அடைந்ததால் சினிமாவை விட்டு அவர் விலகினார். தற்போது 65 வயதாகியுள்ள சுதாகர், அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவரது புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், முந்தைய நினைவுகளை பகிர்ந்து வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தங்கத்தை கிராம் கணக்கில் மொத்தமாக வாங்க முடியாதவர்கள், Gold ETF மூலமாக ஒரு மில்லி கிராம் அளவிலான தங்கத்தையும் வாங்க முடியும். இதற்கு உங்களிடம் டீமேட் கணக்கு இருப்பது அவசியம். பங்குச் சந்தையின் வர்த்தக நேரமான காலை 9.15 மணி முதல் மதியம் 3.30 மணி வரை அன்றைய விலையில் ஒரு மி.கி. தங்கத்தை பங்குகளை போல வாங்கி விற்கலாம். Goldbees, SBI gold ETF, HDFC Gold ETF என்று நிறைய Gold ETF சந்தையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். இதில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்கள் இயக்கம், வாக்கு எண்ணிக்கைக்கான அடிப்படை ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு 10 நாள்களே உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக 305 தொகுதிகளில் வெற்றி பெறும் என அமெரிக்க அரசியல் விமர்சகரும், யூரேசியா குழும தலைவருமான இயான் ஆர்தர் பிரம்மர் தெரிவித்துள்ளார். மோடியின் நிலையான சீர்திருத்தம்
மற்றும் பொருளாதார திறன் காரணமாக அவர் 3ஆவது முறையாக பிரதமராக வருவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 305 தொகுதிகளில் 10 இடங்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பாஜக பெறும் என்று கூறியுள்ளார்.

பூமிக்கு தன்னை கடவுள் அனுப்பியதாகவும், தான் பயாலாஜிகளாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய ராகுல் காந்தி, கடவுள் எப்படிபட்ட நபரை பூமிக்கு அனுப்பியுள்ளார்? கடவுளால் அனுப்பப்பட்டவர் பெரும் பணக்காரர்கள் 22 பேருக்காக மட்டும் வேலை செய்கிறார் என்றார். கொரோனாவால் மக்கள் இறந்துக் கொண்டிருந்தபோது, டார்ச் லைட் அடிக்கச் சொன்னவர்தான் மோடி எனவும் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.