News May 25, 2024

உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி

image

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில், இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. துருக்கிக்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்தியா சார்பாக ஜோதி, அதிதி, பர்னீத் ஆகியோர் களமிறங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஒரு செட்டை கூட விட்டுக் கொடுக்காமல் 232-226 என்ற புள்ளிக் கணக்கில் துருக்கியை வீழ்த்திய இந்திய அணி, தொடர்ந்து 3ஆவது முறையாக உலகக் கோப்பையில் தங்கம் வென்றுள்ளது.

News May 25, 2024

அண்ணாமலையின் திடீர் அமைதிக்கு காரணம் என்ன?

image

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை கடந்த சில நாள்களாக அமைதி காக்கிறார். இதற்கு உள்கட்சி பிரச்னை உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தல் முடிவு INDIA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுவதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் ரிசல்ட் வரும்வரை அமைதி காக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

News May 25, 2024

வங்கிக் கணக்கில் பணம்: பட்டியலிட்ட தமிழக அரசு

image

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 -12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேர்ந்த 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், 1,26,637 மகளிருக்கு ₹1,047 கோடி திருமண நிதியுதவி, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ₹1,500 போன்ற பல்வேறு திட்டங்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

News May 25, 2024

RCB அணியை வீழ்த்தினால் கோப்பை கிடையாது

image

ப்ளே-ஆஃப்பில் RCB அணியை வீழ்த்திய எந்த அணியும், ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆம், ▶2010இல் MI அணி CSK-விடம் இறுதிப் போட்டியில் தோற்றது. ▶2015இல் CSK அணி இறுதிப் போட்டியில் MI இடம் தோற்றது. ▶2020இல் SRH அணி Qualifier 2இல் DC இடம் தோற்றது. ▶2021இல் KKR அணி இறுதிப் போட்டியில் CSK இடம் தோற்றது. ▶2022இல் RR அணி இறுதிப் போட்டியில் GT இடம் தோற்றது. ▶2024இல் RR அணி Qualifier 2இல் SRH இடம் தோற்றது.

News May 25, 2024

வங்கக்கடலில் இன்று 135 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும்

image

ரெமல் புயல் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கி. மீ. வேகத்திலும் இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும், 135 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும் சூறாவளி 90-120 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 135 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

News May 25, 2024

பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு வட இந்தியர் வருகை அதிகரிப்பு

image

மத்தியில் 2014 முதல் பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்த 10 ஆண்டுகளிலும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், ரயில்வே உள்ளிட்டவற்றில் வட இந்தியர்கள் அதிகம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வட இந்தியாவில் இருந்து தமிழகம் வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்புக்காக வந்தபோதிலும், அவர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News May 25, 2024

கேரளாவில் H5N1 தொற்று உறுதி

image

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அரசு கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மண்ணார்காடு அரசு கோழிப்பண்ணையில் உள்ள 9,000 கோழிகளை அழிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கோழிகள் திடீரென இறந்ததை அடுத்து போபால் தேசிய ஆய்வகத்துக்கு மாதிரி அனுப்பப்பட்டது. ஆய்வக முடிவில் கோழிகளுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News May 25, 2024

திருப்புமுனையை ஏற்படுத்திய SRH பவுலிங்

image

RR-க்கு எதிரான Qualifier 2 போட்டியில், SRH பவுலர்கள் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினர். RR அணி அதிரடியான தொடக்கத்தை கொடுத்த போது, SRH பவுலர்கள் அபாரமாக பந்துவீசி மிடில் ஓவர்களில் ரன் எடுக்க விடாமல் தடுத்தனர். ஷாபாஸ், அபிஷேக் தலா 4 ஓவர்கள் வீசி 3/23, 2/24 விக்கெட்டுகளும், நடராஜன் 3 ஓவர்கள் பந்துவீசி 1/13 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனால், SRH அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News May 25, 2024

குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்

image

அரசுப் பணிகளுக்கான குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2, தேர்வு 2Aக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும். தேர்வு2-ன் முதன்மை எழுத்துத்தேர்வுக்கான மாற்றப்பட்ட மற்றும் தேர்வு 2A-ன் புதிய பாடத்திட்டம் <>https://www.tnpsc.gov.in/English/<<>>syllabus.html என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News May 25, 2024

இன்னும் 57 தொகுதிகளில் மட்டுமே தேர்தல்

image

மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று 6ஆவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இத்துடன் சேர்த்து மொத்தம் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவு பெறுகிறது. இன்னும் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இங்கு ஜுன் மாதம் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!