News May 26, 2024

சித்தராமையா மகன் உயிரிழப்பு குறித்து குமாரசாமி சந்தேகம்

image

கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் ராகேஷ் 8 ஆண்டுக்கு முன்பு பெல்ஜியத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி உறுப்புகள் செயலிழந்து பலியானது குறித்து குமாரசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். பாலியல் புகாருக்கு ஆளான பிரஜ்வால், குடும்பத்தினருக்கு தெரிந்தே வெளிநாடு சென்றதாக சித்தராமையா கூறியதற்கு பதிலடி கொடுத்த குமாரசாமி, ராகேஷ் உயிரிழப்பு குறித்து ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News May 26, 2024

கேன்ஸ் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம்

image

பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், சிறந்த படத்துக்கான விருதை ‘All We Imagine As Light’ என்ற இந்திய திரைப்படம் வென்றது. பாயல் கபாடியா இயக்கத்தில் உருவான இப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றதோடு, தற்போது விருதையும் வென்றுள்ளது. ‘Grand Prix’ என்ற இந்த விருது, கேன்ஸ் திரைப்பட விழாவின் 2ஆவது உயரிய விருதாகும்.

News May 26, 2024

கோழிக் கறி விலை உயர்ந்தது

image

கறிக்கோழி கிலோ ₹144க்கு (உயிருடன்) விற்பனையாகி வந்த நிலையில் இன்று ₹3 உயர்ந்து ₹147 என விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், முட்டைக் கோழி கிலோ ₹103 என்ற விலையிலேயே நீடிக்கிறது. தேவை அதிகரித்திருப்பதால் கறிக்கோழியின் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பண்ணைக் கொள்முதல் விலையின்படி, கோழி முட்டை ₹5.80 என விற்பனை ஆகிறது.

News May 26, 2024

பிரச்னைகளை துவம்சம் செய்வார் காளிதேவி

image

சிவனின் மனைவி பார்வதி தேவியின் அம்சமான காளிதேவி உக்கிர தெய்வமாக கருதப்படுகிறார். காளியை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று ஆன்மிகவாதிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல், எதிரிகள் தொல்லை, மரண பயம், தீய கனவுகள் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்போர், காளியை மனமுருகி வழிபட்டால் அந்த பிரச்னைகள் உடனேத் தீரும் என்றும் நம்பப்படுகிறது.

News May 26, 2024

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்

image

வங்கக் கடலில் உருவான ‘ரெமல்’ புயல், மேற்கு வங்கம் அருகே மையம் கொண்டுள்ளது. இப்புயல் கரையை கடந்த பின்னர், தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வளி மண்டலத்தில் இருக்கும் ஈரப்பதத்தினை புயல் இழுத்துக் கொண்டு சென்று விடுவதால், மே 27ஆம் தேதிக்குப் பின் 4 நாள்கள் வறண்ட வானிலை நிலவும். இந்த நேரத்தில் வெப்பம் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரிக்கக்கூடும்.

News May 26, 2024

தோனி சாதனையை சமன் செய்வாரா கம்மின்ஸ்?

image

2011இல் தோனி தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதே ஆண்டில் அவர் தலைமையில் சிஎஸ்கே, ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதேபோல் பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. தற்போது அவர் தலைமையில் ஹைதராபாத், ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இதில் ஹைதராபாத் வென்றால், தோனி சாதனையை கம்மின்ஸ் சமன் செய்வார்.

News May 26, 2024

போலி வேலை வாய்ப்பு குறித்து எச்சரிக்கை

image

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறுவோரை நம்பி ஏமாறாமல் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து அயலக தமிழர் நலத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “நேர்காணலுக்கு செல்லும் முன் நிறுவனம் குறித்து விசாரிக்க வேண்டும், விசா எடுப்பதற்கு முன் குறிப்பிட்ட பணி வாய்ப்பு குறித்து துணை தூதரகத்தில் விசாரிக்க வேண்டும்” என்று பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

News May 26, 2024

எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்

image

இளம் இந்திய வீரர்கள் தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என SRH கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2 வருடங்களாக தனக்கு கேப்டன்ஷிப் சிறப்பானதாக அமைந்திருக்கிறது என்றும், ஆனால், இதற்கு முன்பு எந்தவொரு டி20 அணியையும் வழிநடத்தியதில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளதால், இறுதிப்போட்டியில் நிச்சயம் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News May 26, 2024

ஜுன் 4ஆம் தேதி அனைவருக்கும் சுதந்திர நாள்

image

ஆங்கில நாளிதழுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், ஜுன் 4ஆம் தேதியுடன் பாஜக அரசு பிரியாவிடை பெறும் என்றும், அன்றைய தினம் பலருக்கு சுதந்திர நாளாகவும், கொண்டாட்ட நாளாகவும் இருக்கும் என்றும் கூறினார். உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் INDIA கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News May 26, 2024

கத்தரிக்காயை உணவில் அதிகம் சேர்க்கலாமா? கூடாதா?

image

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற பழமொழி, கத்தரிக்காய்க்கு பொருந்தும். அளவோடு அதை உணவில் சேர்த்தால், புற்றுநோய், இதய நோய் வராமல் தடுக்கும். உணவில் அதிகம் சேர்த்தால், செரிமானம், வாயு பிரச்னை, தோல் ஒவ்வாமை போன்றவற்றை அதிகரிக்க செய்யும். சிறுநீரகத்தில் கல் இருந்தால், கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட்டுகள் அந்தப் பிரச்சனையை மேலும் மோசமாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!