India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

KKR-SRH இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால், எந்த அணி கோப்பையை கைப்பற்றப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், KKR வீரர் சுனில் நரைன் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் அவர், இன்று அணிக்கு கோப்பையை பெற்றுத் தருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜூன் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 17ஆம் தேதி பக்ரித்-ஐ முன்னிட்டு அரசு விடுமுறை வருவதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜூன் 17ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால் சனி, ஞாயிறு, திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை. அதற்குப்பின், ஜூன் மாதத்தில் எந்த ஒரு அரசு விடுமுறையும் இல்லை.

தொலைதூர ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது வெள்ளை, மஞ்சள், பச்சை நிற கோடுகள் இருப்பதை பார்த்திருப்போம். அது ஏன் தற்போது தெரிந்து கொள்வோம். வெள்ளை நிற கோடு இருப்பின், அது முன்பதிவு இல்லாதோர் பயணிக்கும் பெட்டி என அர்த்தம் ஆகும். மஞ்சள் நிற கோடு இருப்பின், மாற்றுத்திறனாளி, நோயாளிகளுக்கான சிறப்பு பெட்டி என்று அர்த்தம். பச்சை, கிரே நிற கோடுகள் இருப்பின் மகளிர் சிறப்பு பெட்டி என பொருள்படும்.

எப்படி நியூட்ரலாக இருக்க வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக CSK கேப்டன் ருதுராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், போட்டியின் போது எதற்கும் அதிகமாக உற்சாகமடையக் கூடாது என்றும், எந்தவொரு விஷயத்திற்காகவும் சட்டென்று மனம் தளரக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கிரிக்கெட்டை பொறுத்தவரை அப்படி இருப்பது தான் சரியான அணுகுமுறை எனக் குறிப்பிட்டார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஜுன் 3ஆம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்றும், அதற்கடுத்த நாள் நடைபெறும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் வெற்றிக் கொடியை நாட்டி, INDIA கூட்டணியின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம் என்றும் கட்சித் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் தாய்ப் பாலை விற்பனை செய்வதற்கு எந்தவித அனுமதியும் இல்லை என்று FSSAI தெரிவித்துள்ளது. இதுபோன்று, தாய்ப்பாலை வணிகமாக்கும் எந்தவொரு செயலுக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு தானம் செய்யப்பட்ட தாய்ப்பாலை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.

பொன்ராம் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் கவின் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ஆம் பாகமாக கூட இருக்கலாம் என்றும், முதல் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நிலையில், 2ஆம் பாகத்தில் கவினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குடும்பங்கள் கொண்டாடும் காமெடி படமாக இப்படம் உருவாகவாகவுள்ளதாகத் தெரிகிறது.

சர்வதேச மாநாடுகளில் மோடியை அமெரிக்க அதிபர் பைடன் தேடி வந்து பேசுவதும், சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவளிப்பதும் என அமெரிக்கா ஒருபக்கம் நட்பு பாராட்டுகிறது. மறுபக்கம், சிறுபான்மையினர் விவகாரம், காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலை விவகாரத்தில் இந்தியாவை விமர்சிக்கிறது. இதைக்கண்டு அமெரிக்கா உண்மையிலேயே இந்தியாவுக்கு நட்பு நாடுதானா என்ற குழப்பம் அரசியல் விமர்சகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

2024 ஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்று கொல்கத்தா, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் கொல்கத்தா அணி 2012இல் சிஎஸ்கே அணியையும், 2014இல் பஞ்சாப் அணியையும் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. ஹைதராபாத் அணி 2016இல் ஆர்சிபி அணியை வீழ்த்தி ஒருமுறையும், ஹைதராபாத் அணி டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இருந்தபோது, 2009இல் பஞ்சாப்பை வீழ்த்தியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

பள்ளிகள் திறக்கும் நாளான ஜூன் 6ஆம் தேதி செய்ய வேண்டியவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது. அதன்படி, ஜூன் 6ஆம் தேதி ‘மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்’ நடத்தப்படவுள்ளது. கல்வி இணை செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும், பள்ளி வளாகம் தூய்மையாக இருக்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.