India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சியைத் தொடங்குவதற்காக, இந்திய அணி நியூயார்க் புறப்பட்டது. ரோஹித் ஷர்மா, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நேற்று புறப்பட்ட நிலையில், விராட் கோலி மட்டும் செல்லவில்லை. இதுகுறித்து பிசிசிஐயிடம் தெரிவித்த அவர், வரும் 30ஆம் தேதி இங்கிருந்து புறப்படவுள்ளார். இதனால், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியைத் தவறவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் தவறி கீழே விழுந்துவிட்டதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வைகோவுக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் சிகிச்சைக்காக அவர் சென்னை விரைந்துள்ளார் என்றும் துரை வைகோ கூறியுள்ளார். நாகர்கோவில் மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் வைகோ பங்கேற்கவிருந்த நிலையில் துரை வைகோ பங்கேற்று இத்தகவலை கூறினார்.

வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தூரத்துக்கு திடீரென கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் படகுகள் தரை தட்டி நிற்கின்றன. இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். காலநிலை மாற்றத்தாலேயே கடல்நீர் உள்வாங்கியிருப்பதாகவும், விரைவில் கடல்நீர் பழைய நிலைக்கு திரும்பி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3ஆம் தேதி மற்றும் ஜூன் 4ஆம் தேதிக்கு இடையே வானில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் அதிசயம் நிகழவுள்ளது. வெள்ளிக் கோளைத் தவிர மற்ற அனைத்தையும் ஒரே நேர் கோட்டில் வானில் பார்க்கலாம். 6 கோள்கள் ஒரே நேரத்தில் வானில் தோன்றுவது இயல்புதான். ஆனால், அவை ஒரே நேர் கோட்டில் தோன்றுவது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இவற்றைப் பார்ப்பதற்கு தொலைநோக்கி அவசியமாகும்.

தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம், இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிழைப்பிற்காக ரவுடியாக மாறுவதைப் பற்றிப் பேசும் இப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் பட்டையைக் கிளப்பி இருக்கும். குறிப்பாக, ‘ஒரு நாளில்’ பாடல், இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட். உங்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா?

திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கருணாநிதி பிறந்தநாளான ஜுன் 3ஆம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100” என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும், உள்ளூர் மைதானங்களில் பெண்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டுமென ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

KKR-SRH இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு, இந்திய மதிப்பின்படி ₹20 கோடி, தோல்வியடையும் அணிக்கு ₹13 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, தொடரில் 3ஆவதாக இடம்பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ₹7 கோடியும், 4ஆவதாக இடம்பிடித்த பெங்களூரு அணிக்கு ₹6.5 கோடியும் வழங்கப்படும். இம்முறை கோப்பையை வெல்லப் போவது யார்?

டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய X பதிவில், “டெல்லி மருத்துவமனை தீ விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இந்த இக்கட்டான சூழலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தை எண்ணி வருந்துகிறேன். காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா ஆட்சியில் அளிக்கப்பட்டது போல 100 யூனிட் விலையில்லா மின்சாரம், ஏழை, எளிய, நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கட்டணம் செலுத்தாதோரின் மின் இணைப்பை துண்டிக்கும் முன்பு அவர்களுக்கு தகவல் தெரிவித்து, கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு இதே நாளில், CSK-வை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில், 148/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 60*(32) ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தோனி 63*(45) அதிரடியாக விளையாடியும் இலக்கை எட்ட முடியாததால், 23 ரன்கள் வித்தியாசத்தில் CSK தோல்வி அடைந்தது.
Sorry, no posts matched your criteria.