News May 26, 2024

தரவரிசை பட்டியல் நாளை அனுப்பப்படுகிறது

image

கலை&அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல், கல்லூரிகளுக்கு நாளை அனுப்பி வைக்கப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. +2 முடித்த மாணவர்கள் கலை&அறிவியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை&அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.

News May 26, 2024

அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும்

image

தமிழகத்தில் நாளை முதல் 5 நாள்களுக்கு வெப்பம் படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், காற்றின் ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

News May 26, 2024

காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும்

image

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 85 முதல் 100 இடங்களில் வெற்றி பெறும் என அரசியல் நிபுணரான யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். பாஜக தனியாக 240 முதல் 260 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் 35 முதல் 45 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் 2014இல் 44 தொகுதிகளிலும், 2019இல் 52 தொகுதிகளில் வென்றது. இந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்து, காங்கிரஸ் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News May 26, 2024

தமிழகத்தில் கோடை மழை 28% அதிகம் பெய்துள்ளது

image

தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 28 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே மாதம் தொடக்கத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, இன்று காலை வரை 28% கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 26, 2024

உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்துமா USA?

image

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. நேற்று நடந்து முடிந்த வங்க தேசத்திற்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை 2-1 என்ற கணக்கில் அந்த அணி வென்றது. அந்த அணியின் முக்கிய வீரர்களான டெய்லர், கேப்டன் மொனக் பட்டேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News May 26, 2024

ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறில்லை

image

பிரதமர் மோடி பேசும் கருத்துகள் அவர் பதட்டத்திலும், தோல்வி பயத்திலும் இருப்பதை உணர்த்துவதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறில்லை என்று கூறிய அவர், அவ்வாறு வந்தால், அதனை ஆதரிக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், I.N.D.I.A கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை என்றும், பிரதமர் தான் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

News May 26, 2024

சூரிய மின் உற்பத்தி 400% அதிகரிப்பு

image

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில், இந்தியாவின் சூரிய மின்சார உற்பத்தி 10 ஜிகாவாட் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஒப்பிடும்போது, நடப்பாண்டு சூரிய மின்சார உற்பத்தி 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

News May 26, 2024

கேன்ஸ் விருது வென்ற கபாடியாவுக்கு மோடி வாழ்த்து

image

கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற பாயல் கபாடியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், பாயலின் திறமை உலக அரங்கில் பிரகாசிப்பதாகவும், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ என்ற படைப்புக்காக இந்தியா பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விருது அவரது தனிப்பட்ட திறமைகளை கெளரவிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இயக்குநர்களையும் ஊக்கமளிப்பதாக கூறியுள்ளார்.

News May 26, 2024

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆபத்து: சசி தரூர்

image

நாட்டை காக்க பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியுள்ளார். சாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்த பாஜக முயல்வதாக குற்றம் சாட்டிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து என்றார். நாட்டில் அனைத்து ஜனநாய அமைப்புக்களையும் பாஜக அவமதித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

News May 26, 2024

கொல்கத்தா கோப்பையை வெல்லும்: ஷேன் வாட்சன்

image

இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கணித்துள்ளார். ஐபிஎல் சீசன் முழுவதும் கொல்கத்தா அணியினர் சிறப்பாக விளையாடியதாக கூறிய அவர், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி போன்ற மிகச் சிறந்த ஸ்பின்னர்கள் அந்த அணியில் உள்ளதாக தெரிவித்தார். ஆண்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரரும் அணியில் இருப்பதால் KKR நிச்சயம் கோப்பையை வெல்லும் என்றார்.

error: Content is protected !!