News May 27, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

☛ அதிகாலையில் எழுந்துவிட்டாலே தோல்விகள் உங்களைவிட்டு தாமாக விலகிவிடும் – அப்துல் கலாம்
☛ கட்டளையிட விரும்புபவர்கள், முதலில் பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். – அரிஸ்டாட்டில்
☛ சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், அதை செயல்படுத்தும் போது சிந்திப்பதை நிறுத்திவிடுங்கள். – நெப்போலியன்
☛ விடாமல் முயற்சிகளை தொடர்ந்து கொண்டிருப்பவர்களைத்தான் வெற்றி தேடி வரும். – நேரு

News May 27, 2024

தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும்

image

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் பட்டப்படிப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளதாகக் கூறும் தமிழக அரசு, 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ் பயிற்றுமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெருதும் பங்காற்றும் எனக் கூறியுள்ளார்.

News May 27, 2024

KKRக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பவுலர்கள்

image

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்தி 21(W), ராணா 19 (W), ரசல் 19 (W), நரைன் 17 (W), ஸ்டார்க் 17 (W), வைபவ் அரோரா 11 (W) கைப்பற்றினர். ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் இருக்கும் அனைத்து பவுலர்களும் சிறப்பாக செயல்படுவது இதுவே முதல் முறை

News May 27, 2024

இன்று பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

image

பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு, மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்தபின் நடைபெறும் இந்த முதல் கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் வெளியான பின் செய்யவேண்டிய பணிகள், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

News May 27, 2024

வரலாற்றில் இன்று: மே 27

image

* நைஜீரியா குழந்தைகள் தினம்
* 1964 – இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்.
* 1930 – உலகின் உயரமான கட்டடமாக அந்நேரத்தில் கருதப்பட்ட 1046 அடி உயர கிரைசுலர் கட்டடம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது.
* 1971 – கிழக்கு பாகிஸ்தானில் பக்பாத்தி நகரில் வங்கதேச இந்துக்கள் 200 பேரை பாகிஸ்தானியப் படையினர் படுகொலை செய்தனர்.

News May 27, 2024

தோனியின் சாதனையை முறியடிக்க முடியவில்லை

image

கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதே ஆண்டில் தோனி தலைமையில் CSK அணி ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றியது. இதன் மூலம் ஒரே ஆண்டில் ஐசிசி கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் தோனி. இன்று அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், SRH கேப்டன் கம்மின்ஸ் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

News May 27, 2024

சென்னையில் இருந்து கிளம்பிய முதல் விமானம்

image

சவூதி அரேபியாவின் மெக்காவுக்கு ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் 5,746 பேர் தனி விமானம் மூலம் மெக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அரசு மானியமாக ₹10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு பயணத்திற்காக முதல் கட்டமாக நேற்று சென்னையில் இருந்து 326 பேர் விமானம் மூலம் கிளம்பியுள்ளனர்.

News May 27, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 15 ▶குறள்: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. ▶பொருள்: பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

News May 27, 2024

ஐபிஎல் விருதுகள் 2024

image

☛ ஆரஞ்சு தொப்பி – கோலி (741 ரன்கள், RCB)
☛ பர்பிள் தொப்பி – ஹர்ஷல் படேல் (24 விக்கெட், PBKS)
☛ ஃபேர் பிளே விருது – SRH
☛ சீசனின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது – நிதீஷ் குமார் ரெட்டி (SRH)
☛ மிகவும் மதிப்புமிக்க வீரர்- சுனில் நரைன் (488 ரன்கள், 17 விக்கெட்-கேகேஆர்)
☛ சிறந்த மைதானத்துக்கான விருது – ஹைதராபாத்

News May 27, 2024

விவாகரத்து செய்திக்கு நமீதா பதில்!

image

‘எங்கள் அண்ணா’, ‘பில்லா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை நமீதா. இவருக்கு கடந்த 2017இல் வீரேந்திர சௌதாரி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இதை மறுத்துள்ள நமீதா, சமீபத்தில்தான் என் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தேன், பின் எதன் அடிப்படையில் இது போன்ற செய்திகளைப் பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!