News March 20, 2025

2025ல் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

image

உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டத்தை இந்த முறையும் பின்லாந்து தக்க வைத்துள்ளது. OXFORD பல்கலை. வெளியிட்ட ‘World Happiness Report 2025’ அறிக்கையின்படி, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் நார்டிக் நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. 147 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், இந்தியாவை பின்னுக்கு தள்ளி PAK 109வது இடத்திலும், இந்தியா 118வது இடத்திலும் உள்ளது. AFG கடைசி இடத்தில் உள்ளது.

News March 20, 2025

மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்: பறந்த அதிரடி ஆர்டர்

image

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர், 200 ரூபாய் மதுபானத்துக்கு கூடுதலாக ₹40 வசூலித்த வீடியோ அண்மையில் வைரலானது. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டாஸ்மாக் நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஊழியர் மகேஸ்வரனை தற்காலிக பணிநீக்கம் செய்ததோடு, இனி இதுபோல முறைகேட்டில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

News March 20, 2025

BHIM UPIல் பரிவர்த்தனை செய்தால் ஊக்கத்தொகை

image

BHIM செயலி மூலம் மேற்கொள்ளப்பட்ட ₹2,000க்கு குறைவான UPI பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ₹1,500 கோடி ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2024 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், தனிநபர் மூலம் வணிகர்களுக்கு BHIM UPI ஆப் மூலம் செலுத்தப்பட்ட ₹2,000க்கு கீழுள்ள பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

News March 20, 2025

சேகர்பாபு தான் ஒருமையில் பேசினார்: வேல்முருகன்

image

சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தான் ஒருமையில் பேசினார் என தவாக தலைவர் <<15824134>>வேல்முருகன்<<>> விளக்கம் அளித்துள்ளார். என்ன சொல்ல வருகிறேன் என புரிந்து கொள்ளாமல் அதிமுக – திமுக MLAக்கள் கூச்சலிட்டனர். அதனால் தான் முன்னோக்கி சென்று சபாநாயகரிடம் முறையிட்டேன். அப்போது சேகர்பாபுதான் ஒருமையில் பேசினார். அவர் தவறான தகவலை சொன்னார். அதையே முதல்வரும் சொன்னது வருத்தம் தருகிறது என்றார்.

News March 20, 2025

பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை? பாலாஜி கணிப்பு

image

2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அணி ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

News March 20, 2025

டென்ஷனான CM.. எச்சரித்த சபாநாயகர்….

image

சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பேச அனுமதிக்காததால் தவாக தலைவர் வேல்முருகன் அமைச்சர்களை நோக்கி கை நீட்டி பேசினார். டென்ஷன் ஆன CM ஸ்டாலின், பேரவையில் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து மரபை மீறி நடந்து கொண்டதாக வேல்முருகனை எச்சரித்த சபாநாயகர், இனி இப்படி நடந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினார்.

News March 20, 2025

ரம்ஜானுக்கு வருகிறான் சிக்கந்தர்!

image

ரம்ஜான் பண்டிகையையொட்டி வரும் 30 ஆம் தேதி சல்மான் கானின் சிக்கந்தர் தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் ராஷ்மிகா, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை சல்மான் கான் தனது X பக்கத்தில் அறிவித்துள்ளார்.

News March 20, 2025

தீவிர பயிற்சியால் உயிரிழந்த ஜேக் சென்ட்லர்!

image

48 மணிநேரத்தில் 6 கிலோ எடையைக் குறைக்கும் விபரீத முயற்சின்போது பிரபல MMA ஃபைட்டர் ஜேக் சென்ட்லர்(21) உயிரிழந்தார். கடந்த 3ம் தேதி மெல்போர்னில் நடந்த போட்டியில் எடை கூடுதலாக இருந்ததால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக Rhabdomyolysis(தசைநார்கள் கிழிதல்) பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

News March 20, 2025

BREAKING: என்கவுன்டரில் 22 பேர் பலி

image

சத்தீஸ்கரில் மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG) நடத்திய தேடுதல் வேட்டையின்போது 22 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பீஜப்பூர், தண்டேவாடா மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் காலை 7 மணிக்கு நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேடையின்போது நிகழ்ந்த மோதலில், DRG வீரர் ஒருவரும் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

பொய் சொல்லாதீங்க…EDக்கு ஐகோர்ட் கண்டனம்

image

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட ரெய்டுக்கு சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது இரவில் சோதனை நடத்தவில்லை; அரசு ஊழியர்களை சிறைபிடிக்கவில்லை என ED தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொய் சொல்லாதீங்க. இரவில் எதற்கு சோதனை என கண்டித்தனர். மேலும், மார்ச் 25 வரை நடவடிக்கை எடுக்க தடை விதித்து, பதில் மனுத் தாக்கல் செய்ய EDக்கு உத்தரவிட்டனர்.

error: Content is protected !!