News May 27, 2024

நான் தீவிர விஜய் ரசிகன்: சூர்யகுமார்

image

தமிழில் தனக்கு பிடித்த நடிகர் விஜய்தான் என கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தான் விஜய்யின் தீவிர ரசிகன் என்றும், அவரது ஆக்‌ஷன் படங்கள் மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். கல்லூரியில் படிக்கும்போது அவரது படங்களை திரையரங்குகளில் சென்று பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, விமானத்தில் ‘வாரிசு’ படத்தை பார்த்து அவர் வைப் ஆனது குறிப்பிடத்தக்கது.

News May 27, 2024

சேகுவேரா புத்தகங்களுடன் தீபக் ராஜா உடல் அடக்கம்

image

நெல்லையில் கடந்த வாரம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை 7 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். ஆயிரக்கணக்கான கிராம மக்கள் புடை சூழ, சுமார் 4 மணி நேரமாக அவரது சொந்த ஊராக மூன்றடைப்புக்கு உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு, ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் புத்தகங்கள் வைத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

News May 27, 2024

3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் மோடி

image

மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த ஆண்டில் மட்டும் பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வருகை தந்துள்ளார். இந்நிலையில், மே 30, 31 மற்றும் ஜூன் 1 என 3 நாள்கள் பயணமாக மீண்டும் அவர் தமிழகம் வருகிறார். குமரி கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக அவர் வருகை தர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தல் முடிவின்போது, அவர் இமயமலை சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

News May 27, 2024

ரயில்வே ATVM உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திண்டுக்கல், பழனி, காரைக்குடி, கோவில்பட்டி, செங்கோட்டை, போடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் காலியாகவுள்ள ATVM உதவியாளர் பணிக்கு பொதுமக்கள் ஜூன் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. உதவியாளர்கள் அவரவர் முயற்சியில் விற்றுத்தரும் பயணச்சீட்டு கட்டணத்தில் 3% கமிஷனாக தரப்படும். விண்ணப்பம், கூடுதல் விவரங்களை https://sr.indianrailways.gov.in-இல் அறியலாம்.

News May 27, 2024

பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு தரும் கற்பூரவள்ளி இலை

image

கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாற்றை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால், நாள்பட்ட சளி மற்றும் இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, அஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல், வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

News May 27, 2024

யாரை சொல்கிறார் அண்ணாமலை?

image

பாஜகவுக்கு எதிராக செயல்பட்டவர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு நீக்கப்படுவார்கள் என அண்ணாமலை கூறியது விவாதத்தை எழுப்பியுள்ளது. தேர்தல் முடிவுகளே வெளிவராத நிலையில், யாருக்காக இதை கூறுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை காலம் கடந்து நீக்குவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேர்தலின் போது சில பாஜக நிர்வாகிகள் மற்ற கட்சியினருடன் இணக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

News May 27, 2024

+2 மாணவர்கள் நாளை விடைத்தாள் நகல் பெறலாம்

image

+2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டலுக்கு இதே இணையதளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்குமாறும், விண்ணப்ப படிவத்தை வரும் மே 29 முதல் ஜூன் 1 வரை நேரில் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 27, 2024

I.N.D.I.A ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாது

image

மக்களவைத் தேர்தலுக்கான, 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, அன்றைய தினம் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜூன் 1ஆம் தேதி தங்கள் மாநிலத்தில் 10 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளதாலும், புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும், அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாது எனக் கூறினார்.

News May 27, 2024

பங்குச்சந்தையில் கவனமாக செயல்படுங்கள்!

image

இந்திய பங்குச்சந்தை உச்சத்தை எட்டியுள்ள சூழலில், முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டுமென சந்தை சார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிக லாபத்தில் இருக்கும் பங்குகளில் சிறு பகுதியை விற்க அறிவுறுத்தும் நிபுணர்கள், தேர்தல் முடிவுகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கணித்துள்ளனர். அதேநேரம், எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றினாலும் நீண்ட காலத்திற்கு சந்தை ஏற்றத்தை நோக்கியே பயணிக்கும் எனவும் கூறுகின்றனர்.

News May 27, 2024

இந்தியாவை குறி வைக்கும் பாக். சைபர் மோசடி கும்பல்

image

பாகிஸ்தானை சேர்ந்த Transparent Tribe என்ற சைபர் மோசடி கும்பல், இந்தியா தொடர்புடைய நிறுவனங்களின் இணையதளத்தை இலக்காக வைத்து ஹேக் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Python , Golang போன்ற இணைய மொழிகளைப் பயன்படுத்தி, டெலிகிராம், கூகுள் டிரைவ் உள்ளிட்ட இணைய சேவையைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மக்களவைத் தேர்தலில் சைபர் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!