India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 16 ▶குறள்: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. ▶பொருள்: வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இங்கி., 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது, இந்நிலையில், தனக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளதால் இங்கி வீரர் பட்லர் இன்று (மே 28) நடைபெறும் மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தின் ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஏற்கெனவே 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த 4 பேரை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான தவல் தக்கரை ராஜஸ்தானின் அபு சாலையில் இருந்து உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியை கேரள அரசும், மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவும் கைவிட வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கேரளா அரசின் முயற்சியை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என கேட்டுக்கொண்ட அவர், தமிழக அரசு அல்லது காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெட்ரா பின்னே அணை கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இன்று (மே 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

தேர்தல் ஆணையம் நேர்மையான ஆணையமாக செயல்படுகிறதா? என சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மதவெறியைத் தூண்டும் வகையில் பிரதமர் பேசுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால், அவரிடம் விளக்கம் கேட்பதற்கு பதிலாக, பாஜக தலைவருக்கு கடிதம் எழுதுவதாக சாடினார். மேலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் கொள்ளத் தொடங்கியதாக விமர்சித்துள்ளார்.

இன்று (மே 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

* நெல்லையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை 7 நாள்களுக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
* பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா வரும் 31ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகிறார்.
* +2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
* ஜெயலலிதா இந்துத்துவவாதி என்பது தொடர்பாக அதிமுகவினருடன் விவாதத்திற்கு தயார் – அண்ணாமலை

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் குடும்ப உறவுகளுக்கு இடையிலான பிணைப்பை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், புனித யாத்திரைகள் செல்லவும், உறவினர்களை சந்திப்பதற்கும், வேலைக்கு செல்லவும் பெண்கள் இலவச பேருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். மேலும், பெண்களிடம் சேமிப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குஜராத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். அதேபோல், டெல்லியில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் பலியாகின. 2 விபத்திற்கும் ஆஜாக்கிரதையே காரணம் என கூறலாம். 2 இடங்களிலும் தீயணைப்பு படையிடம் இருந்து உரிய சான்றிதழ் பெறாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்தந்த துறை அதிகாரிகள் உஷார் நிலையில் இருந்திருந்தால், விலைமதிப்பற்ற மனித உயிர்களை காத்திருக்கலாம்.
Sorry, no posts matched your criteria.