India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் வரை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

SBI வங்கி தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அவர்களின் ஸ்டாக் மார்கெட் நடவடிக்கைகளை கண்காணிக்க இருப்பதாகவும், ஆதலால், மேலதிகாரி அனுமதியின்றி, எஸ்பிஐ குழுமம் அல்லாத வேறு எந்த நிறுவனத்திலும் Demat கணக்கு அல்லது டிரெடிங் கணக்கு தொடங்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. முன் அனுமதியின்றி கணக்கு வைத்திருக்கும்பட்சத்தில், அதை 6 மாதத்திற்குள் மூடிவிடும்படியும் SBI உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரகால பயணமாக இமயமலைக்கு இன்று செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், ஓய்வுக்காக அபுதாபி சென்ற அவர் நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தவறாமல் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்ட அவர், இந்த ஆண்டும் தனது நண்பருடன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹54,200க்கு விற்பனை ஆகிறது. நேற்று ₹6,740ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹35 அதிகரித்து ₹6775ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்றும் கிராமுக்கு ₹1.20 உயர்ந்து ₹102.20ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்துவரும் தங்கம், வெள்ளி விலையினால் நுகர்வோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

காரைக்காலில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷ் (13) என்ற மாணவன் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தோஷின் உடலில் 17 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன. ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தேசத்துக்கான பணியில் இணைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இரண்டு மாதங்களாக அணியணியாக பிரிந்து ஐபிஎல் விளையாடிய வீரர்கள், தற்போது ஒன்றிணைந்து உலகக் கோப்பை தொடரில் விளையாடச் சென்றிருக்கின்றனர். அதேநேரம், மனைவியின் பிரிவு தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஹர்திக், உற்சாகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

₹100க்கும் குறைவான யுபிஐ பரிவர்த்தனைக்கு இனி எஸ்எம்எஸ் அனுப்பப்படாது, மின்னஞ்சலே அனுப்பப்படும் என்று HDFC வங்கி அறிவித்துள்ளது. பரிவர்த்தனை குறித்த எஸ்எம்எஸ் அனுப்ப வங்கிகளுக்கு ₹0.01 முதல் ₹0.03 வரை செலவாகிறது. இதுபோல நாளொன்றுக்கு அனுப்பப்படும் 40 கோடி எஸ்எம்எஸ்களுக்கு சில கோடி ரூபாய்களை வங்கிகள் செலவிடுகின்றன. இந்த செலவினத்தை குறைக்க HDFC வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குப் பின்னரும் காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்துள்ளது. இதற்கான தனியார் ஆய்வாளர்களையும் அக்கட்சி களமிறக்கியிருந்தது. இதனையடுத்து, I.N.D.I.A கூட்டணி 280 முதல் 290 தொகுதிகளை வெல்லும் என்று அவர்கள் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்களாம். அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் கூட்டணிக் கட்சிகளை ஜூன் 1ஆம் தேதி அழைத்திருக்கிறது காங்கிரஸ்.

பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரான பல்கர் சிங்கிடம் இளம்பெண் ஒருவர் வேலைவாய்ப்பு கேட்டுள்ளார். பெண்ணுடன் வீடியோ காலில் பேசிய அமைச்சர், ஆடைகளை களைந்தால் வேலை தருவதாகக் கூறி, ஆபாசமாக சைகை செய்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி பஞ்சாப் டிஜிபியை தேசிய மகளிர் ஆணையம், பாஜக ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இவ்வழக்கில் பணத்தை எடுத்துச்சென்றவர்கள் நயினார் நாகேந்திரனின் எம்எல்ஏ கோட்டா டிக்கெட்டில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உட்பட 4 பேர் மே 31இல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.