India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பீகாரில் இன்று வெப்ப அலை தாங்காமல் பள்ளிகளில் குழந்தைகள் மயங்கி விழுந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பீகாரில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் ஜூன் 8ம் தேதி வரை அம்மாநில அரசு விடுமுறை அளித்துள்ளது. தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழக அரசு என்ன முடிவு செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அன்றாடம் பயன்படுத்தும் பல மொபைல் செயலிகள், நமது செயல்பாடுகளை தரவுகளாக சேமித்து வைத்திருக்கின்றன. இந்த தரவுகளை அரசியல் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் கேட்டுப் பெறுவதாக கூறப்படுகிறது. ஒருவரின் மதம், தாய்மொழி, சமூக வலைதளங்களில் தனது நண்பர்களுக்கு எந்த மாதிரியாக தகவல்களை பகிர்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பன போன்ற தரவுகளை கொண்டு வாக்காளர்களை கணிப்பதாக தேர்தல் உத்தி நிபுணரான ருத்விக் ஜோஷி கூறுகிறார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம் என ஐசிசி அறிவித்துள்ளது. குறிப்பாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட உள்ளது. அதே சமயம், சைகை மொழியிலும் போட்டியை ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடு செய்யப்படுள்ளது. அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் இத்தொடர், வரும் ஜுன் 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

‘மெட்ரோ’, ‘கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த ஆனந்த கிருஷ்ணன், அடுத்ததாக ‘நான் வயலன்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, சிரிஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக் உடல்நிலை பாதிப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமர், தன் உடல்நிலையை நேரிலேயே விசாரித்து கொள்ளலாமே என நவீன் பட்நாயக் பதிலடி தந்துள்ளார். வளர்ச்சிக்கான கருத்துகளை முன்வைத்து பரப்புரை செய்யாமல், வயோதிகத்தை பிரமதர் முன்வைக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.70 வயதை கடந்த அனைவரும், பிரதமரை போல் ஆரோக்கியமாக இருப்பதும் சாத்தியமில்லை.

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. காஞ்சி, தி.மலை, சேலம், கரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் செயல்படும் இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ₹400, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் இசைக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ₹500 வழங்கப்படும். முழு விவரங்களை www.artandculture.tn.gov.in-இல் பார்க்கவும்.

பிரதமரின் கன்னியாகுமரி தியான நிகழ்ச்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமரின் மறைமுக பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும், நிகழ்ச்சிக்கு தடை கோரி திமுக புகார் அளித்துள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் மே 31 முதல் 2 நாள்களுக்கு இரவு பகலாக மோடி தியானம் செய்ய உள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளதால் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. நடப்பு ஆண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெயில் இதுவாகும். நுங்கம்பாக்கம் 105, மதுரை 104, வேலூர், நாகை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் சபாநாயகர் அப்பாவுவிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், முதற்கட்டமாக ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் விசாரணை முடிந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும், கே.வி. தங்கபாலு, ரூபி மனோகரன், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் போலீசாரின் விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தோனியை நியமிக்க வேண்டுமென முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, சம்மந்தப்பட்ட வீரர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். 2020இல் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்த தோனி, ஐபிஎல் தொடரில் இன்னமும் விளையாடி வருகிறார். அதனால், தோனியால் விண்ணப்பிக்க முடியாது.
Sorry, no posts matched your criteria.