News May 30, 2024

டெல்லியில் 126டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதா?

image

டெல்லியில் நேற்று முன்தினம் 126டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதுதான் நடப்பு ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், சென்சார் கருவியில் பழுது ஏற்பட்டதன் காரணமாக் கூட இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளது.

News May 30, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 30, 2024

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு ஒரு வெற்றிகூட இல்லை

image

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 3 T20, 3 ODI போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் T20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற இங்கி., ODI தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் ODIயில் இங்கி., வென்ற நிலையில் இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் இங்கி., 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News May 30, 2024

இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என்பது உறுதி

image

பதவி விலகப்போகும் பிரதமராக மோடி இருப்பதாக காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இரண்டாம் கட்டத் தேர்தலுக்குப் பின் INDIA கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறப்போகிது என்பது தெளிவாகிவிட்டது என்ற அவர், ஜூன் 4ஆம் தேதி மோடி பிரதமர் பதவியில் இருந்து விலகுவார், அவருடன் சேர்ந்து உள்துறை அமைச்சரும் விலகுவார் என்றார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு INDIA கூட்டணி உறுதியாக ஆட்சியமைக்கும் என்றார்.

News May 30, 2024

டாப் நடிகர்களின் IMDb தரவரிசை பட்டியல் வெளியீடு

image

ஜனவரி 2014 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் உலகளவில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த இந்திய திரை நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபிகா படுகோன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். தனுஷ் 30ஆவது இடத்தையும், ஃபகத் பாசில் 81ஆவது இடத்தையும், த்ரிஷா 84ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

News May 30, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 30, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* பாலியல் புகாரில் சிக்கிய கா்நாடக MP பிரஜ்வால் முன்ஜாமின் மனு தள்ளுபடி.
* பள்ளிகள் திறக்கும் ஜூன் 6ஆம் தேதி பள்ளி மாணவர்கள் ஆதார் பெற நடவடிக்கை எடுக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை.
* பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ், திமுக மனு
* தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், வாகனத்தின் RC ரத்து செய்யும் முறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.

News May 30, 2024

தோலை பளபளப்பாக பராமரிக்க உதவும் ஜூஸ்கள்

image

*வெள்ளரிக்காய் ஜூஸ், சரும வறட்சியை தடுப்பதோடு, தோலில் உள்ள வீக்கத்தை சரி செய்கிறது. *தக்காளி ஜூஸ், UV கதிர்களில் இருந்து தோலை பாதுகாக்க உதவுகிறது. *பீட்ரூட் ஜூஸில் உள்ள வைட்டமின் சி, ரத்த ஓட்டத்தை சீராக்கி தோலை பளபளப்பாக்கும். *கீரை சாறுகளில் உள்ள வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, தோலில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தும். *முட்டைக்கோஸ் சாறு, தோலில் உண்டாகும் கருவளையங்களை சரி செய்கிறது.

News May 30, 2024

புதிய ஜெர்ஸியில் இந்திய அணி வீரர்கள்

image

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் 1ஆம் தேதி (இந்திய நேரப்படி 2ஆம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க்கில் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளனர். முன்னதாக, உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

News May 30, 2024

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முள்ளங்கி

image

உடலுக்கு தினமும் தேவைப்படும் வைட்டமின் சி, 155 சதவிகிதம் வெறும் அரை கப் முள்ளங்கியில் உள்ளது. அதிகளவு வைட்டமின் சி உள்ளதால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி நமக்கு வரக்கூடிய சளி, இருமல் தொல்லையிலிருந்து இது பாதுகாக்கிறது. தீங்கு நிறைந்த ஃப்ரீ ரேடிகல்ஸ், வீக்கம், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் பலன் முழுமையாக கிடைக்க முள்ளங்கியை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

error: Content is protected !!