India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<<15824235>>மகிழ்ச்சி<<>> குறித்து வெளியான பட்டியல் இந்தியாவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நடக்கும் உக்ரைன், பாலஸ்தீன மக்களை விட நம் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதே அதற்குக் காரணம். 147 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 118வது இடமே கிடைத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானும் பட்டியலில் இந்தியாவுக்கு முன்னே இருக்கிறது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வர என்ன செய்யலாம்?
சனி பகவான் மார்ச் 29இல் மீன ராசியில் நுழைவதால் 3 ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 1) மேஷம்: பணப்பிரச்னை ஏற்படும். உடல்நல பாதிப்பு உண்டாகும். தொழிலில் தடை உருவாகும். 2) கும்பம்: வேலையில் இடையூறுகள் ஏற்படும். பணம் கையில் நிற்காது. குடும்பத்தில் மோதல்கள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. 3) மீனம்: உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். நிதிநிலை சீராக இருக்காது. நம்பிக்கை குறையும்.
2025 ஐபிஎல் சீசனில் 1,000 சிக்ஸர்களை வீரர்கள் அடிப்பார்கள் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டை புதிய பரிமாணத்திற்கு ஐபிஎல் கொண்டு சென்றுள்ளதாகவும், கிரிக்கெட்டை நேசிப்பவர்களுக்கு ஐபிஎல் வரமாக உள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணி 275க்கும் அதிகமான ரன்களை குவிக்கும் என்றும் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்துக்கொள்ளாமல் அவையில் பேசுவதாக தவாக தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார். தனது பேச்சை அமைச்சர்கள் முதல் அதிமுக உறுப்பினர்கள் வரை தவறாக புரிந்துகொண்டதாக கூறிய அவர், தமிழை ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக ஆக்க வேண்டுமென்றே தான் பேசியதாக விளக்கமளித்தார். மேலும், <<15824134>>சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுத்தாலும்<<>>, அதற்கு கட்டுப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெறாது என டி வில்லியர்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார். மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளே இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் எனவும் அவர் கணிப்பு வெளியிட்டுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், ரசிகர்கள் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, வரும் ஏப்ரலில் வங்கிகளுக்கு, தமிழ்நாட்டில் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. •ஏப்ரல் 6- ராம நவமி •ஏப்ரல் 10- மகாவீர் ஜெயந்தி. •ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு •ஏப்.18 – புனித வெள்ளி. தவிர 4 ஞாயிறு, 2 & 4ஆம் சனிக்கிழமையும் விடுமுறை என்பதால் மொத்தம் 10 நாட்கள் வங்கிகள் செயல்படாது. வாரம் 5 நாட்கள் வேலைநாள் அமலுக்கு வந்தால் மேலும் 2 நாள் விடுமுறை அதிகரிக்கும்.
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா இறந்து சுமார் 30 ஆண்டுகளாகியும் அவரது மரணத்தில் இருக்கும் மர்மத்திற்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், சில்க்கை அவரது உதவியாளர் ராதாகிருஷ்ணன் கொலை செய்துவிட்டு சொத்துகளை அபகரித்து விட்டதாக சில்கின் சகோதரர் நாக வரபிரசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். ராதாகிருஷ்ணன் எங்கே இருக்கிறார் என அறிந்தால் வழக்குத் தொடுப்பேன் என்றும் சில்கின் சகோதரர் கூறியுள்ளார்.
காசா மக்களின் வாழ்க்கை மீண்டும் கண்ணீர்க் கடலில் தத்தளிக்கத் தொடங்கியுள்ளது. பணயக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இன்று நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குருபகவான் வரும் மே 14ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு செல்கிறார். குருவின் இந்தப் பெயர்ச்சியால் 3 ராசிகள் கோடிகளில் புரளப் போகின்றனர். 1) ரிஷபம்: தொழில் சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளில் பணம் வரும். 2) சிம்மம்: திருமண யோகம் உண்டு. திடீர் பண வரவால் வாழ்க்கை மாறும். 3) தனுசு: வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். இல்லறத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
9 மாத விண்வெளி பயணத்திற்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளார் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். ஆனால், அதிக நாள்கள் விண்வெளியில் இருந்தவர்கள் பட்டியலில் சுனிதாவுக்கு இரண்டாமிடம்தான். முதலில் இருப்பவர் அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி வைட்சன். இவர் 675 நாள்கள் விண்வெளியில் இருந்து சாதனை படைத்துள்ளார். 608 நாள்கள் விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ், அதற்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.