India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நார்வே செஸ் தொடரின் 4ஆவது சுற்றுப் போட்டியில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்துள்ளார். அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுக்கு எதிரான இந்தப் போட்டியில், பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். தொடக்கத்தில் ஒரு சிறிய தவறு செய்த அவர், போட்டியின் இறுதியில் தோல்வி அடைந்தார். இதனால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அவர், தற்போது 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியது பள்ளிக் கல்வித்துறை. முன்னதாக ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெப்பம் காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடை வெயில் அதிகமாக உள்ளதால், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததால், தேதி மாற்றப்பட்டுள்ளது.

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘லாக்டவுன்’ திரைப்படம், வரும் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கியுள்ளார். மேலும், இப்படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இணைந்து இசையமைத்துள்ளனர். ஊரடங்கை மையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஜூன் 2ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின்படி, தான் திகார் சிறைக்கு திரும்பிச் செல்லவுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாஜகவினர் தன் குரலை ஒடுக்க முயற்சித்தனர் எனக் கூறிய அவர், சிறையில் பாஜகவின் ஆதரவு பெற்ற சிறைத்துறை அதிகாரிகள் தன்னை சித்ரவதை செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறினார். எனினும், அதற்கெல்லாம் தான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் வரும் ஜூன் 6ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் ஜூன் 4, 5இல் தூய்மை பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகுப்பறை, கரும் பலகைகளை தூய்மைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதோடு, ஆசிரியர் அறை, ஆய்வகம், வகுப்பறையில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுமாறும் அனைத்து மாவட்டக் கல்வி இயக்குநர்களுக்கு அறிவுறுதுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற்று, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று TTV தினகரன் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் மட்டும் 5-க்கும், மேற்பட்டோர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்றார். இந்நிலை இனியும் தொடராமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 257/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, பூரன்-75, பவல்-52, ரூதர்போர்டு-47* ரன்கள் குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஆஸி., அணி, 222/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக, இங்கிலிஷ்-55 ரன்கள் குவித்தார்.

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையின் மூலம், வியாபாரிகளின் வருமானம் ஸ்தம்பித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் அவர் பேசும்போது, காந்தியை படம் பார்த்து தான் பொதுமக்கள் தெரிந்துகொண்டனர் என்ற மோடியின் கூற்றை கண்டித்த அவர், காந்தியின் மீதுள்ள வன்மத்தையே பிரதமர் காட்டியுள்ளதாக விமர்சித்தார். முல்லை பெரியாற்றில் ஒரு செங்கல்லை கூட கேரளாவால் எடுத்து வைக்க முடியாது என்றார்.

சென்னை மாதவரத்தில் தாய்ப்பாலை ப்ளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்த முத்தையா, 50 மில்லி லிட்டரை ₹500 என விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்ப்பாலைக் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று பல பொய்களை அள்ளி வீசி அதிக விலைக்கு அவர் தாய்ப்பாலை விற்றிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்களை அகற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் தூணிலும், துரும்பிலும் இருப்பார். எனவே, அரசு நிலங்களை நிலமற்ற மக்களுக்குப் பகிர்ந்தளித்தால், கடவுள் மிகவும் மகிழ்ச்சி அடைவார். அனைவருக்கும் ஆசிர்வாதம் அளிப்பார் என்று தெரிவித்தது.
Sorry, no posts matched your criteria.