News June 1, 2024

REPUBLIC: மம்தா பானர்ஜி 16 – 20 இடங்களைக் கைப்பற்றுவார்

image

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 16-20 இடங்களில் வெற்றி பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 42 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் நான்கு முனை போட்டி (திரிணாமுல் காங்கிரஸ், INDIA கூட்டணி, இடதுசாரிகள், பாஜக கூட்டணி) நடைபெற்றது. பாஜக கூட்டணி 21- 25 இடங்களையும், INDIA கூட்டணி 0-1 இடங்களையும் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

News June 1, 2024

NEWS 18: கர்நாடகத்தில் பாஜக வெற்றி

image

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 23 முதல் 26 தொகுதிகளை வெல்லும் என்று நியூஸ் 18 கணித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 3 முதல் 7 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

C VOTER: திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெறும்

image

மக்களவைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிமுக கூட்டணி எந்த தொகுதியும் வெல்ல வாய்ப்பில்லை என்றும், பாஜக கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

News June 1, 2024

ஆந்திராவில் தெலுங்கு தேசம் வெற்றி பெறும்

image

ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும் People’s Pulse கணித்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி 95 முதல் 110 தொகுதிகளை வெல்லும் என்றும் ஜெகன் மோகன் தலைமையிலான YSR காங்கிரஸ் கூட்டணி 45 முதல் 60 தொகுதிகளை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

TIMES NOW: திமுக 34 -35 தொகுதிகளில் வெல்லும்

image

தமிழ்நாட்டில் திமுக 34 -35 தொகுதிகளில் வெல்லும் என TIMES NOW செய்தி ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 2 – 3 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

INDIA TODAY: பாஜக 23 – 25 தொகுதிகளில் வெல்லும்

image

கர்நாடகாவில் பாஜக 23 – 25 தொகுதிகளில் வெல்லும் என INDIA TODAY நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. JDS 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 – 5 தொகுதிகளிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

NEWS 18: கேரளாவில் UDF வெற்றி

image

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான UDF 15 முதல் 18 தொகுதிகளை வெல்லும் என்று நியூஸ் 18 தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான LDF கூட்டணி 2 முதல் 5 தொகுதிகளை வெல்லும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 முதல் 3 தொகுதிகளை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

NDTV: மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்

image

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி 353 – 368 இடங்களை பெறும் என NDTV வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் INDIA கூட்டணி 118 – 133 இடங்களையும், மற்றவை 43 – 48 இடங்களையும், வெல்லலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

INDIA TODAY: திமுக 33 – 37 தொகுதிகளில் வெல்லும்

image

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்தியா டுடே செய்தி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, INDIA கூட்டணி 33 – 37 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் NDA கூட்டணி 2 – 4 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 0 – 2 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

REPUBLIC: பாஜக அமோக வெற்றி பெறும்

image

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி 359 இடங்களை பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் INDIA கூட்டணி 154 இடங்களிலும், மற்றவை 30 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!